வயது ஏற ஏற கவர்ச்சியும் ஏறுதே.. ரசிகர்களை கிறங்கடித்த தமன்னா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது.

விலகிய சிம்பு?: குறிப்பாக கே.வி.ஆனந்த் இயக்கிய கோ என்ற படத்தில் சிம்புதான் முதலில் நடிக்க வேண்டி இருந்தது அந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்தால் மட்டும்தான் தான் நடிப்பேன் என அவர் கூறி படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் உலாவியது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தமன்னா மீதான கிரேஸ் இருந்தது. எனவே இன்னும் பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இரண்டு பேரின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார்.
அரண்மனை 4: தமன்னாவின் நடிப்பில் கடைசியாக தமிழில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. அதில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்ததாகவும்; அரண்மனை 4 வெற்றிக்கான காரணங்களில் தமன்னாவின் நடிப்பும் மிக முக்கியமான ஒன்று என்று ரசிகர்கள் பேசினர். பேயாக அவர் நடித்திருந்ததில் முதிர்ச்சி தெரிந்ததாகவும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர்.
கிளாமர் ஃபோட்டோஷூட்: இந்நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பக்ரிந்திருக்கிறார். அதில் தங்க நிற உடை அணிந்தபடி படு கிளாமராக சோபாவில் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 35 வயது ஆனாலும் தமன்னாவின் கவர்ச்சி இன்னும் குறையவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை ட்ரெண்டாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











