ஹரிஹரனின் ஸ்டார் நைட்.. அடிதடி குழப்பத்திலும் கவர்ச்சி ஆட்டம் ஆடிய தமன்னா..சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஹரிஹரனின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரம்பா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிவா, யோகி பாபு, டிடி, KPY பாலா, மைனா நந்தினி உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இடையே அடிதடி நடைபெற்ற போதும், நடிகை தமன்னா துணிச்சலாக கவர்ச்சி ஆட்டம் போட்டார்.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் கடந்த சில நாட்களாக பிரம்மாண்டமாக தயாராகி வந்தது. இந்த நிகழ்ச்சி முதலில் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டதாகவும், பின் கட்டணத்திற்காக அதிக அளவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியைக்காண 25,000 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு முன்பகுதியிலும், 7000 ரூபாய் டிக்கெட்டை பெற்றவர்கள் நடுப்பகுதியும், 3000 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பின்பகுதியும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

Tamannaah got a salary of one crore for Hariharans Star Night show in jaffna

ஹரிஹரனின் ஸ்டார் நைட்: ஆனால், இலவசமாக நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அங்கு எதிர்பார்த்ததை விட பெரும்பாலானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இலவச பகுதியில் அளவிற்கு அதிகமாக கூட்டம் வந்ததால், அங்கிருந்த இளைஞர்கள் மேடைகள், ஒலி அமைப்புகள் செய்யப்பட்டிருந்த மேடைகள், மரங்கள் போன்றவற்றில் ஏறி அட்டகாசம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் நடிகை ரம்பாவின் கணவர் என்பதால், அவர், பார்வையாளர்களிடம் அமைதியாக இருக்கும் படி கெஞ்சினார். ஆனால், அவை எதற்கும் இளைஞர்கள் செவிசாய்க்கவில்லை.

போலீசார் தடியடி: இதையடுத்து, இலவச பார்வையாளர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பைக் கடந்து இளைஞர்கள் பலரும் கூச்சலிட்டுக்கொண்டு கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமான சூழ்நிலையும் உருவானது. அவர்களை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தடியடி நடத்தி பின் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் பாதியிலேயே அவசர அவசரமாக இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தவறு ஏதும் நடக்கவில்லை: இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 35 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு லட்சம் பேர் வந்ததால் சமாளிக்க முடியவில்லை என்றார். மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம். எங்கள் தரப்பில் தவறுகள் ஏதும் இல்லை. கூட்டம், அத்துமீறி உள்ளே நுழைந்தது தான் போலீசார் அடி தடி நடத்த காரணம் என்றார். மேலும், அதனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைப்பட்டது. அதன்பின் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நன்றாகத்தான் நடந்தது என்று கூறியிருந்தார்.

தமன்னா கவர்ச்சி ஆட்டம்: இப்படி இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கலவரம் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, நடிகை தமன்னா, சென்னையில் கூட இவ்வளவு கூட்டத்தை நான் பார்க்கவில்லை என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.. என் ராவெல்லாம் லாங் ஆவுதே.. என காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இவர் நடனமாடும் போது எப்படியாவது தமன்னாவை பார்த்துவிடவேண்டும் என்று முண்டியடித்து வந்த பெண் ஒரு கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தார். இப்படி இந்த இசை நிகழ்ச்சியில் பல குழப்பம் நடந்த போது தமன்னா கவர்ச்சி ததும்ப ஆட்டம் போட்டார். இந்த கவர்ச்சி ஆட்டத்திற்கு அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X