அந்த தென்னிந்திய நடிகர் அப்படி நடந்துகொண்டார்.. மன்னிப்பு கேட்டார்.. மோசமான அனுபவத்தை பகிர்ந்த தமன்னா
மும்பை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்குள் இப்போது அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
தெலுங்கிலும் மார்க்கெட் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமன்னாவின் காதல் டூ பிரேக் அப்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்தனர். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார்.
அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் தமிழில் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. கடைசியாக அவர் ஒடேலா 2 படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி மோசமான ட்ரோல்களையும் சந்தித்தது.
அனுபவம் பகிர்ந்த தமன்னா: இந்நிலையில் அவர் தென்னிந்திய சினிமவில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது தென்னிந்திய படம் ஒன்றில் கமிட்டானேன். அப்போது நடிகர் ஒருவர் எனக்கு தொந்தரவு கொடுத்தார். அவரது நடத்தை எனக்கு ரொம்பவே சங்கடத்தை கொடுத்தது. இப்படி நடந்துகொண்டால் நடிக்கமாட்டேன் என சொன்ன பிறகு அந்த நடிகர் மன்னிப்பு கேட்டார்" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ அந்த தென்னிந்திய நடிகர் எந்த மொழியை சேர்ந்தவராக இருப்பார் என தேட தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











