ஆபாச உடை என சர்ச்சை.. ராதாவாக தோன்றிய ஃபோட்டோக்களை டெலிட் செய்த தமன்னா
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமன்னா நடத்திய ஃபோட்டோஷூட் ஒன்று பெரும் சர்ச்சையான சூழலில் அந்தப் ஃபோட்டோக்களை டெலிட் செய்திருக்கிறார் அவர்.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இரண்டு பேரின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது.

உச்சபட்ச கவர்ச்சி: இதற்கிடையே ஹிந்திக்கு சென்ற தமன்னா பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்கூட ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார். இந்நிலையில் தமன்னா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அவர் பெற்றிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோட்டோ ஷூட்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தினார் தமன்னா. அதில் கண்ணனின் ராதாவாக காட்சியளித்தார். ஆனால் அந்தப் புகைப்படத்துக்காக தமன்னா அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும்; ராதாவை அவமதித்திருக்கிறார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. பொறுமையாக இருந்த தமன்னா; இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்துகொண்டு இப்போது அந்த ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டா அக்கவுண்ட்டிலிருந்து டெலிட் செய்திருக்கிறார். முன்னதாக இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்த அவர், 'ராதாவாக நான் உருவகப்பட்டபோது உன்னதமாக உணர்ந்தேன். அனைத்தையும் மீறிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது' என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











