Tamannaah - பல வயது மூத்தவர்களுடன் நடிப்பது பற்றி தமன்னா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
சென்னை: Tamannaah (தமன்னா) வயது மூத்தவர்களுடன் நடிப்பது குறித்து தமன்னா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ஹிந்தி சினிமா அவருக்கு கை கொடுத்தது. அவர் நடித்த ப்ளான் ஏ ப்ளான் பி, பப்ளி பவுன்சர் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து சமீபத்தில் அவரது நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலாஜியும் வெளியானது. இரண்டும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றாலும் தமன்னாவின் கவர்ச்சிதான் பேசுபொருளாக இருந்தது.

தமிழில் ரீ எண்ட்ரி: இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் தமன்னா. படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என கூறப்பட்டாலும் காவாலா பாடலில் அவரது நடனம் சென்சேஷனல் ஆகிவிட்டது. எந்த மேடை ஏறினாலும் இப்போது காவாலா ஸ்டெப் போடாமல் மேடையை விட்டு கீழே இறங்குவதில்லை தமன்னா. ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் மீண்டும் தமிழில் வாய்ப்புகள் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சியில் தமன்னா?: இதற்கிடையே அஜித் கமிட்டாகியிருக்கும் விடாமுயற்சி படத்துக்கு ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடந்தது. முதலில் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து எல்லாம் ஃபைனல் ஆகிவிட்டது ஆனால் படம் தொடங்குவதற்கு தாமதம் ஆவதால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விடாமுயற்சியில் தமன்னா கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

போலோ ஷங்கர்: அதேபோல் தமிழ் மொழி தவிர்த்து தெலுங்கிலும் தமன்னா நடித்திருக்கிறார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் உருவாகியிருக்கிறது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கிறார். அதில் நடித்திருக்கிறார் தமன்னா. தமிழில் வேதாளம் ஹிட்டானபடி தெலுங்கிலும் ஹிட்டாகும்பட்சத்தில் அங்கும் இன்னொரு இன்னிங்ஸை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் தமன்னா.
வயது மூத்தவர்களுடன்: இரண்டாவது இன்னிங்ஸை தென்னிந்தியாவில் நல்லபடியாக அவர் தொடங்கியிருந்தாலும் வயது மூத்த நடிகர்களுடன் மட்டுமே கமிட்டாகிவருகிறார். இளவயது ஹீரோக்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நிலைத்து நிற்பது கொஞ்சம் கடினம்தான் என ஒரு தரப்பினர் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
விளக்கம்: இந்நிலையில் தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் வயது மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "வயது வித்தியாசத்தை பார்க்கக்கூடாது. திரையில் வரும் இர்னடு கதாபாத்திரங்களை மட்டும் பாருங்கள். 60ஆவது வயதிலும் டாம் க்ரூஸ் அட்டகாசமாக ஆக்ஷன் செய்கிறாரே. அந்த வயதில் நான் குத்தாட்டம் போட விரும்புவேன்" என்றார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், போலா ஷங்கர் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











