தமன்னாவுக்கு கேரவனுக்குள் நடந்த கொடூரம்.. அவரே சொன்ன ஷாக் தகவலை கேளுங்க.. இது வேறயா?

சென்னை: தமிழ் மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கோலிவுட்டில் அவர் கடைசியாக நடித்த அரண்மனை 4 திரைப்படம் மெகா ஹிட்டானது. அதற்கு பிறகு தமிழில் அவர் எந்தப் படங்களிலும் கமிட்டாகவில்லை. அதேசமயம் ஹிந்தியில் அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் தெலுங்கில் ஒடேலா 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தனக்கு கேரவனுக்குள் நடந்த சம்பவம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் தமன்னா.

ஹிந்தியில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த தமன்னா அடுத்ததாக தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் ஹிந்தியோ, தெலுங்கோ எடுத்ததும் அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதேசமயம் அவர் தமிழில் கேடி படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் தமன்னாவின் வில்லத்தனமான ரோலை எல்லோரும் ரசித்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் என வரிசையாக நடித்தார்.

tamannaah vijay varma

முன்னணி நடிகை: இதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் பிஸியாக நடிக்க ஆரம்பித்து அங்கும் ஹிட்டுகளை கொடுக்க ஆரம்பித்தார். அதன் காரணமாக தமிழ் மற்றும் தெலுங்கில் குறிப்பாக தமிழில் பெரிய ரவுண்டு வந்தார். தனுஷ், விஜய், அஜித், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் இரண்டு மொழிகளிலும் குறைய ஆரம்பித்தன.

ஹிந்தியில் பிஸி: அதனைத் தொடர்ந்து ஹிந்திக்கு மீண்டும் சென்ற அவர் பிஸியாக ஆரம்பித்தார். லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் விழுந்தார். அவர்களுக்கு இந்த வருடத்துக்குள் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் இருந்த தமன்னா தமிழுக்கு வந்து ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

தமிழில் கமிட்டாகவில்லை?: அரண்மனை 4 ஹிட்டடித்தாலும் அடுத்ததாக அவர் எந்தத் தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என்றே தெரிகிறது. அதேபோல் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் தமன்னாவும் இருப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. அடுத்ததாக தெலுங்கில் அவரது நடிப்பில் ஒடேலா 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தமன்னா கேரவனுக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தமன்னாவின் பேட்டி: சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "ஒருமுறை எனது கேரவனில் நான் இருந்தபோது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்துவிட்டது. அதை கண்டு எனக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டன. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது. எனவே அந்த இடத்தில் அழக்கூட முடியாத நிலையில் இருந்தேன். அப்போது எனக்குள் நானே, இதனை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு அந்தக் கடினமான ஒன்றை எனக்கு மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். அது எனக்கு ரொம்பவே உதவியது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X