சம்பளத்தை உயர்த்திட்டாரா தமன்னா?.. அடேங்கப்பா இத்தனை கோடியா?.. காட்டில் மழைதான்
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காவாலா தமன்னா: பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கிடையே அவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அநேகமாக விரைவில் ஹைதராபாத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை 4: தமன்னாவின் நடிப்பில் கடைசியாக சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. அதில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்ததாகவும்; அரண்மனை 4 வெற்றிக்கான காரணங்களில் தமன்னாவின் நடிப்பும் மிக முக்கியமான ஒன்று என்று ரசிகர்கள் பேசினர். பேயாக அவர் நடித்திருந்ததில் முதிர்ச்சி தெரிந்ததாகவும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர்.

சம்பள உயர்வு: இந்நிலையில் தமன்னா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அரண்மனை 4 படத்தின் பிரமாண்ட வெற்றி மற்றும் அந்தப் படத்தில் தமன்னாவின் நடிப்புக்கு கிடைத்த நல்ல பெயர் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு அவர் தனது சம்பளத்தை அதாவது அரண்மனை 4க்காக 5 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றதாகவும் இப்போது ஒரு கோடி ரூபாய் அதிகரித்து 6 கோடி ரூபாய் சம்பளமாக ஃபிக்ஸ் செய்திருக்கிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











