அட தமன்னாவா இவங்க.. ஓவர் ஒர்க் அவுட்.. ஆளே மாறிட்டாங்களே.. புருவம் உயர்த்தும் ரசிகர்கள்

மும்பை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்குள் இப்போது அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன.

Tamannaah Latest Photos Gone Trending on Social Media
Photo Credit:

ஜெயிலர் ட்ரெண்டிங் தமன்னா: பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் தமிழில் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தாலும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை

உச்சபட்ச கவர்ச்சி: இதற்கிடையே ஹிந்திக்கு சென்ற தமன்னா பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்கூட ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார்.அண்மையில் தமன்னா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியானது. அதன்படி ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அவர் பெற்றிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னாவின் காதல்: இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்தனர். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என உறுதியாக தெரியவில்லை. அந்த பிரேக்கப்புக்கு பிறகு தமன்னா அதிக ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆளே மாறிய தமன்னா: சூழல் இப்படி இருக்க தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பயங்கரமாக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக காணப்படுகிறார். கடந்த சில காலமாகவே அவர் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்தார். இப்போது வெயிட் லாஸ் செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள்; அட வெறித்தனமா ஒர்க் அவுட் செஞ்சு பழையபடி வந்துட்டாங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X