தீவிர ஆன்மீகத்தில் இறங்கிய தமன்னா?.. எப்போ மேடம் குட் நியூஸ் வரும்.. ரசிகர்கள் எழுப்பும் கேள்வி

சென்னை: நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த அவர் பாலிவுட்டிலும் எண்ட்ரி ஆனார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தமன்னா தீவிர ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

tamannaah vijay varma tamil cinema


முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காவாலா தமன்னா: பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் அரண்மனை 4 படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார் தமன்னா. அதனை இருவருமே உறுதி செய்திருக்கின்றனர். இரண்டு பேரின் திருமணம் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி தனது வீட்டில் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று விஜய் வர்மா ஒரு பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் சமீபத்தில் அவர் பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன தமன்னா சீக்கிரம் திருமண செய்தியை சொல்வீர்கள் என்று பார்த்தால்; ஆன்மீக ஃபோட்டோ போடுறீங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X