இயக்குநருடன் சண்டை.. கோபத்துடன் வெளியேறிய தமன்னா.. நடந்தது என்ன ?

சென்னை : எஃப்3 ஷூட்டிங்கின் போது இயக்குநருடன் சண்டை போட்ட தமன்னா கோபத்துடன் வெளியேறியது குறித்து இயக்குநர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார்.

தமன்னா

தமன்னா

தமன்னாவின் 16 ஆண்டுகால திரைப்பயணத்தில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தமன்னா மிரட்டி இருந்தார். இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

முன்னணி நடிகையான தமன்னா தற்போது குர்துந்தா சீதகலம், போல சங்கர், போலே சுடியான், சோர் நிகல் கே பாகா. பப்ளி பவுன்சர், தட் ஈஸ் மஹாலட்சுமி, ஏன் என்று காதல் என்பேன், காத்து கருப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.

கடுமையான வாக்குவாதம்

கடுமையான வாக்குவாதம்

இந்நிலையில், தமன்னா நடித்த எஃப்3 என்ற தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை அனில் ரவிபுடியே இயக்கியிருந்தார். இந்த படம் குறித்து இயக்குநர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், எஃப்3 படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கும், தனக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

படத்தில் தமன்னா நடிக்க வேண்டிய காட்சிகள் ஒரு சில மட்டுமே இருந்தன. இதனால் படத்தை அவசரமாக முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நான் இருந்தேன். அதேபோல் தமன்னாவுக்கும் மறுநாள் வேறு இடத்தில் ஷூட்டிங் இருந்தது இதனால், அவரும் அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால், சில காட்சிகள் மட்டுமே இருந்ததால், நடித்து முடிக்கும்படி கூறினேன்.

சண்டை சமாதானம்

சண்டை சமாதானம்

நேரமாகிவிட்டதால் தமன்னா நடிக்க மறுத்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது, இதையடுத்து, கோபத்துடன் வெளியேறிய தமன்னாக கேரோவேனுக்கு சென்றுவிட்டார். பின்னர், அவரிடம் சென்று சமாதானமாக பேசி மீதக்காட்சி நடித்து கொடுக்க சொன்னேன். பின்னர் இருதரப்பும் சமாதானமாகி அந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டது என்றார் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X