ஸ்ரீதேவி பயோபிக்கில் நடிக்க பிரபல நடிகைக்கு ஆசையாம்.. ஆனால், அதில் இப்படியொரு சிக்கல் இருக்கே?
சென்னை: தமிழில் பையா, அயன், சுறா, வீரம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது இந்தி. படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். ஜெயிலர் படத்திற்கு பின்பு தமன்னாவின் மார்க்கெட் வேற லெவலில் மாறியுள்ளது. இதனிடையே சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மறைந்த நடிகையின் ஒருவரது பயாேபிக்கில் ஆசை என அவர் கூறியுள்ளார். ஆனால், அது நடக்கவே நடக்காது எனவும் எப்படி சாத்தியமாகும் என்றும் நெட்டிசன்கள் கேள்விகள அடுக்க தொடங்கி விட்டனர்.
கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளியது. அதுவும் அச்சச்சோ பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார். அதன் பிறகு இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற வெப் தொடரிலிலும் நடித்து திரை ரசிகர்களை கவர்ந்தார். விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

காதல் தோல்வி: இந்தி நடிகர் விஜய் வர்மாவும் இவரும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது., இதனைத்தொடர்ந்து தமன்னா பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று பேசுபொருளானது. அதில், அற்புதங்கள் நிகழும் எனக் காத்திருப்பதைவிட, அவற்றை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதில் அளித்தனர். தற்போது தமன்னா ஒடேலா 2, ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் 2வில் நல்ல கதாப்பாத்திரம் என பேச்சு அடிபடுகிறது.
மறைந்த நடிகையின் பயோபிக் படம்: சினிமா விழாக்களில் அதிகம் கலந்துகொள்ளும் தமன்னா பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். காதல் தோல்வியில் இருந்து மீள தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்து கொள்கிறார். இதனிடையே தனது ஆசை எதுவென்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, மறைந்த நடிகை ஸ்ரீதேவி பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசை என கூறியுள்ளார். ஆனால், அது நடக்க வாய்ப்பு இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

காரணம்: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மனைவியின் பயோபிக்கை எடுக்க எப்போதும் எடுக்க விடமாட்டேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு அடார் லவ் படத்தில் இடம்பிடித்த பாடல் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அப்போது அப்படம் ஸ்ரீதேவியின் பயோபிக் என்றும் அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவது போன்றும் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அதன்பிறகு பிரியா வாரியர் மீதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி நீதிமன்றம் வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவி மரணம்: கடந்த 208ஆம் ஆண்டு துபாய் ஓட்டல் ஒன்றில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. பின்பு மூக்கில் ரத்தம் வருவது போன்ற சர்ச்சைகளும் வெடித்தன. அவரது மரணம் இயற்கையானதா இல்லையா என்பதும் குறித்தும் ஒரு விவாதமே கிளப்பியது. அவரது மரணத்தில் இருக்கும் சர்ச்சைகள் முடிந்த பாடில்லை. ஆனால், அவரது பயோபிக்கில் நடிப்பது முடியாத காரியம் என்றும் தமன்னாவே அவரது பயோபிக்கில் நடிக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலிக்க தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











