அழகாய் பிங்க் கலரில் ஜொலிக்கும் தமன்னா.. காதலும் கடந்து போகும்.. ஹார்ட்டின் விடும் ரசிகர்கள்!
சென்னை: கல்லூரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன தமன்னா அதன் பிறகு படிக்காதவன், அயன், சூறன் போன்ற படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். விஜய் வர்மாவுடனான காதல் முறிவில் இருந்து மீண்டு வரும் தமன்னா அவ்வப்போது அவர் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோன்று தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கிறங்கடித்துவிட்டது. தேம்பாதீங்க தமன்னா நாங்க இருக்கோம் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் தமன்னா, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சி வருகிறார். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோன்று அவர் விதவிதமான மாடல் உடைகளை அணிந்து விழா நிகழ்ச்சிகளுக்கு செல்லும் புகைப்படங்கள் தமன்னாவின் இமேஜை உயர்த்தியே காட்டி வருகின்றனர்.

காதல்: இதற்கிடையில், விஜய் வர்மாவுடனான காதல் கிசுகிசுவில் சிக்கிக் கொண்டார். இருவரும் நல்ல நண்பர்கள் தான் என தெரிவித்துக்கொண்டாலும், லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்து காதலிப்பதை சொல்லாமலே உறுதிப்படுத்தினர். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ள போவதாகவும் செய்திகள் வலம் வந்தது. ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். தமன்னா விஜய் வர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியதுதான் பிரேக்அப் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

காதல் பிரேக்அப் ஆன பிறகும் இருவரும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது போன்ற செய்திகள் வரவில்லை. ஹோலி கொண்டாடிய வீடியேோவை தமன்னா பதிவிட்டார். இவர்களது காதல் பிரிவுக்கு பல காரணங்களை தெரிவித்தனர். இதிலிருந்து விடுபட தமன்னா எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார். அந்த வகையில் அவர் தெலுங்கில் லீட் ரோலில் நடித்திருக்கும் ஒடேலா 2 திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது. கும்பமேளாவில் படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தார் தமன்னா.தமிழில் அரண்மனை-4, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்ததுடன், அவரது நடனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்ததோடு, படத்தின் வசூலிலும் சாதனை படைத்தது. அரண்மனை 4 படத்தில் அச்சோ அச்சோ அச்சச்சோ பாடலும் ஹிட் வரிசையில் இடம்பிடித்தன. இனி தமன்னா நடிக்க வேண்டாம். ஒரு பாட்டிற்கு இப்படி வந்து போனால் போதும் என்கிற அளவிற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எப்போதும் மாடர்ன் உடையில் அசத்தி வரும் தமன்னா தற்போது அவர் நடத்தியிருக்கும் போட்டோ ஸூட்டை பார்த்து தங்கமாய் ஜொலிக்கும் தமன்னா என வர்ணிக்க தொடங்கிவிட்டனர். பிங்க் நிற புடவையில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதை பார்த்து அழகு டால் என்றும் கமாண்ட் செய்து வருகின்றனர். வெண்ணிற உதடுகள் பிங்க் நிற புடவையில் ஜொலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காதல் சோகத்தில் இருந்து மூழ்க வேண்டாம் காதலும் கடந்து போகும் என கூறி அவருக்காக ஹார்ட்டின் எமோஜியை யன்படுத்தி ஆறுதல் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











