தமன்னாவுக்கு டும் டும் டும்.. எப்போ கல்யாணம் தெரியுமா?.. அவரே சொன்ன செம விஷயம்

சென்னை: தமன்னா தமிழ், ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவரது நடிப்பில் கடைசியாக அரண்மனை 4 படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவருக்கு புதிய சிக்கலாக சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய பெட்டிங் செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையும் நடத்தினார்கள். சூழல் இப்படி இருக்க தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார் தமன்னா.

தமன்னா ஒருகாலத்தில் தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்துவந்தவர் திடீரென வாய்ப்புகள் இல்லாமல் தவிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு ஹிந்திக்கு சென்ற அவர் தனது வெற்றியை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஹிந்தியில் மட்டும் உச்சக்கட்ட கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்தார் அவர். அது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

tamannaah vijay varma

மீண்டும் தமிழில்: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு அவர் நடனமாடி தமிழில் ட்ரெண்டிங்கில் வந்தார். தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு ஹிட்டை பெற்றார். மேலும் தமிழில் சில படங்களில் அவர் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவுடன் தம்முவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் தங்களது காதலை உறுதி செய்திருக்கிறார்கள். இதற்கிடையே சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய பெட்டிங் ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் தமன்னா.

அமலாக்கத் துறையினர் விசாரணை: அதனையடுத்து அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பினார்கள். ஆனால் முதலில் அவர் ஆஜராகவில்லை. பிறகு தனது தாயுடன் கவுகாத்திக்கு சென்று அமலாக்கத் துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த விவகாரம் அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தமன்னாவின் ரசிகர்களுக்கு எழுந்திருந்தது.

திருமணம்: சூழல் இப்படி இருக்க தமன்னாவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 2025ஆம் அண்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். மேலும் தமன்னா - விஜய் வர்மா திருமணமானது அடுத்த வருட தொடக்கத்திலேயே; அதாவது மார்ச் மாதத்துக்கு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதற்கான வேலைகள் ஜரூராக ஆரம்பித்திருக்கிறது என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X