“ஆரம்பத்திலிருந்தே அவர் படத்துல நடிக்கணும்னு ஆசை… இப்ப நிறைவேறிடுச்சு”: நடிகை தமன்னா
சுந்தர் சி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்
சென்னை: சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தில் தமன்னா நடிக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி இப்போது சிம்புவுடன் கைகோர்த்துள்ளார். அட்டரிண்டிக்கி தரேடி என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இந்த நிலையில் சுந்தர் சியின் அடுத்த படத்தில் தமன்னா நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். சிம்பு பட ஷூட்டிங் முடிந்த பிறகு விஷால் தமன்னா இணையும் படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
இப்படம் குறித்து பேசிய தமன்னா, ஆரம்ப காலத்திலிருந்தே சுந்தர் சியை மிகப் பிடிக்கும் எனவும், அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படம் மூலம் நிறைவேறப்போவதாகவும் தெரிவித்தார். இது ஒரு ஆக்ஷன் படம், என்னுடைய கதாப்பாத்திரமும் ஆக்ஷன் கலந்த கதாப்பாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
சுந்தர் சியிடம் இணை இயக்குனராக இருந்த சுராஜ் எடுத்த கத்திச் சண்டை திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இரண்டாவது முறையாக விஷாலுடன் தமன்னா இணைகிறார்.
தமன்னா இப்போது மிகப் பிசியான நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கில் சைய்ரா நரசிம்மா ரெட்டி படத்திலும் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











