அந்த மாதிரி படம் பார்த்த தமன்னா.. என்ன நடந்தது தெரியுமா?.. அவரே சொன்னதை கேளுங்க

சென்னை: நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த அவர் பாலிவுட்டிலும் எண்ட்ரி ஆனார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தச் சூழலில் தமன்னாவின் பழைய பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

Tamannaah Old Interview Goes Trending on Social Media

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காவாலா தமன்னா: பாலிவுட்டில் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து அவரது நடிப்பில் இன்னும் சில படங்களும் வெளியாகவிருக்கின்றன.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்தச் சூழலில் தமன்னா சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இன்டர்ஸ்டெல்லர் படத்தை இரண்டு தடவை பார்த்தும் எனக்கு புரியவில்லை. அது நான் பயங்கரமாக மொக்கை வாங்கிய தருணம். சக நடிகர் மீது எனக்கு க்ரஷ் வந்ததில்லை என்பதுதான் உண்மை. எனக்கு இப்போதுவரை வாகனம் ஓட்ட தெரியாது. அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. பள்ளி படிக்கும்போது எனது தோழிகளின் வீட்டுக்கு செல்வேன். அப்போது சிடி பிளேயரில் நல்ல படம் போடும்போது ஆபாச பட சிடியும் இருந்தது. அதை வேறு வழியில்லாமல் தோழிகளுடன் சேர்ந்து பார்த்தேன். அதை மறுக்கவில்லை" என்றார்.

காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தமன்னா வீட்டில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற பேச்சு ஓடியதும்; விரைவில் அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கலாம் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X