“பையா பட சமயத்தில் நிஜமாகவே கார்த்தியை காதலித்தேனா..?” முதன்முறையாக மனம் திறந்த தமன்னா!

நடிகர் கார்த்தியுடன் நட்பு ரீதியில் கூட நெருங்கிப் பழகியதில்லை என நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

சென்னை: நடிகர் கார்த்தியுடனான தனது உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் நடிகை தமன்னா.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் தமன்னா. தெலுங்கில் ஸ்ரீ எனும் படம் மூலம் அறிமுகமான தமன்னா, தமிழில் கேடி படத்தில் நடித்தார். ஆனால், கல்லூரி படம் தான் அவருக்கு நல்ல திறமையான நடிகை என அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. உலகளவில் பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழில் அவர் எத்தனை படங்கள் நடித்திருத்தாலும், பையா தான் அவரது ரசிகர்களுக்கு எவர்டைம் பேவரைட் படம். அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் கார்த்தி - தமன்னா இடையேயான லவ் கெமிஸ்ட்ரி. பையாவுக்கு பிறகு, சிறுத்தை படத்திலும் கார்த்தியுடன் சேர்ந்து நடித்தார் தமன்னா.

தமன்னா மறுப்பு:

தமன்னா மறுப்பு:

இதனால் கார்த்தியும், தமன்னாவும் காதலிப்பதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை என தமன்னா அப்போது மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, அந்த பேச்சு அப்படியே அடங்கிப்போனது.

கெமிஸ்ட்ரி தான் காரணம்:

கெமிஸ்ட்ரி தான் காரணம்:

இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ள தமன்னா, தனக்கும் கார்த்திக்கும் நட்பு அடிப்படையிலான உறவுக்கூட இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஒரு நடிகையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எனது கடமை. பையா படத்தில் எனக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி தான் மக்களை அப்படி பேச வைத்தது.

சகநடிகர் மட்டுமே:

சகநடிகர் மட்டுமே:

கார்த்தி எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே. மற்றப்படி அவருடன் நான் நட்பு ரீதியாகக்கூட நெருங்கிப் பழகியதில்லை. நான் காதலில் விழுந்தால் அதை மறைக்காமல் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வேன். என் காதலை பற்றி முதலில் வெளிப்படுத்துவது நானாக தான் இருக்கும். எனது ரசிகர்களுடன் அதை பகிர்ந்து கொள்வது தான் எனக்கு மகிழ்ச்சி", என தமன்னா கூறியுள்ளார்.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் தமன்னா நடித்துள்ள சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் பெட்ரோமாக்ஸ் எனும் படத்தில் யோகி பாபு, சத்யன், காளிவெங்கட் உள்ளிட்டோருடன் சேர்ந்து தமன்னா நடிக்கிறார். பிஸியாக நடித்து வரும் தமன்னா, தனது காதல் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X