twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம் அவங்க.. மீடூ புகார் கூறியவர்களை புறக்கணிப்பது வெட்கக்கேடு.. தமன்னா தடாலடி!

    |

    Recommended Video

    மீ டூ என்பது விளம்பரம் தேட பயன்படுத்தப்படுகிறது - நடிகை தமன்னா- வீடியோ

    சென்னை: சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் பெட்ரோமாக்ஸ் படங்களின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை தமன்னா.

    இந்நிலையில், மீடு புகார் கூறியதற்காக சினிமா பணிகளில் இருந்து பெண்களை புறக்கணிப்பது மிக வருத்தமான விஷயம் என்றும், இப்படி செய்தால், தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை பெண்கள் எப்படி தைரியமாக எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

    பேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்பேரன்பு அப்பாவாக வாழ்ந்து காட்டிய மம்மூட்டி - மகுடம் 2019 விருது வழங்கிய கமல்

    மீடூ ஹேஷ்டேக்

    மீடூ ஹேஷ்டேக்

    வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக அம்பலப்படுத்தவதே மீடூ இயக்கத்தின் நோக்கமாகும். ஹாலிவுட்டில் தொடங்கிய மீடூ ஹேஷ்டேக், பாலிவுட்டில் பெரும் தலைகளை உருட்டி பின்னர் தமிழ்நாட்டில் வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து தெரிவித்த புகார்களால் விஸ்வரூபம் எடுத்தது.

    மீடூ ஹேஷ்டேக்

    மீடூ ஹேஷ்டேக்

    வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக அம்பலப்படுத்தவதே மீடூ இயக்கத்தின் நோக்கமாகும். ஹாலிவுட்டில் தொடங்கிய மீடூ ஹேஷ்டேக், பாலிவுட்டில் பெரும் தலைகளை உருட்டி பின்னர் தமிழ்நாட்டில் வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து தெரிவித்த புகார்களால் விஸ்வரூபம் எடுத்தது.

    நட்சத்திர நடிகர்கள் அலட்சியம்

    நட்சத்திர நடிகர்கள் அலட்சியம்

    மீடூ புகார் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்தாலும், நட்சத்திர நடிகர்கள் யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. பெரிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட போதும், அவர்களுக்கு சாதகமாக செயல்படும் போக்கே அதிகரித்து காணப்பட்ட நிலையில், மீடூ ஹேஷ்டேகும் வலுவிழந்தது.

    வாய்ப்பு மறுப்பு

    வாய்ப்பு மறுப்பு

    மீடூ புகார் கூறிய பெண்களுக்கு எதிராகவே திரையுலகம் செயல்பட தொடங்கியுள்ளது தான் இதில், வெட்கக்கேடான விஷயம். தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை பொது வெளியில் ஒரு பெண் வெளிப்படுத்திய போதும், அவருக்கு ஆதரவு தருவதற்கு மாறாக பிளாக் மார்க் செய்யப்பட்டு அவருக்கான வாய்ப்புகளை தடுத்து வருகின்றனர்.

    மீண்டும் மீடூ

    மீண்டும் மீடூ

    மீடூ புகார் குறித்து இதுவரை அமைதியாக இருந்து வந்த தமன்னா, தற்போது மீடூ புகார் கூறியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் வருத்தமான விஷயம் என மீடூ இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மீடூ விவகாரம் சில காலம் காணாமல் போய் இருந்த நிலையில், ஆண்ட்ரியா கூறப்போகும் அந்த நபர் யார் என்ற ஆர்வத்திலும், தமன்னாவின் இந்த அறிவிப்பாலும் மீண்டும் மீடூ இயக்கம் தலை எடுத்துள்ளது.

    English summary
    Tamannaah said it was sad that the women who spoke out do not get much opportunities in the industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X