கபடி கோச்சாக களமிறங்கும் தமன்னா.. ஸ்போர்ட்ஸ் குறித்து என்ன சொன்னாங்க தெரியுமா?

ஹைதராபாத்: கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா தனது அடுத்த படத்தில் கபடி கோச்சாக நடித்து வருகிறார்.

தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் தேவி 2, பெட்ரோமாக்ஸ் என இரு படங்கள் வெளியாகின.

தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியின் காதலியாக நடித்து அசத்தியிருந்தார் தமன்னா.

ஸ்போர்ட்ஸ் படம்

ஸ்போர்ட்ஸ் படம்

இந்தியா முழுவதும் தற்போது பயோபிக் படங்களும், ஸ்போர்ட்ஸ் படங்களும் எக்கச்சக்கமாக வெளியாகி வருகின்றன. தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், தொடர்ந்து பல படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் கடந்த ஆண்டு விஜய்யின் பிகில் படமும் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கபடி கோச்

கபடி கோச்

டோலிவுட்டில் ஏற்கனவே நானியின் ஜெர்சி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கனா படத்தின் தெலுங்கு ரீமேக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்த் நடிக்கவுள்ள ஸ்போர்ட்ஸ் படத்தில் நடிகை தமன்னா கபடி கோச்சாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும்

எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும்

கபடி கோச்சாக நடிப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்த தமன்னா, தனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது என்ற சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார். ஸ்கூல் படிக்கும் போது P.E.T பீரியட் வந்தால் அதனை தான் பங்க் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

இப்படி ஸ்போர்ட்ஸுக்கும் தனக்கும் எப்போதுமே ஆகவே ஆகாது என்று இருந்த நிலையில், தற்போது முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் படத்தில் நடிக்க உள்ளது தனக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் எனக் கூறியுள்ளார். கபடி கோச்சாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல அதற்காக கபடி விளையாட்டையும் தான் கற்று வருவதாக கூறியுள்ளார்.

ட்ரீம் ரோல்

ட்ரீம் ரோல்

மேலும், நடிகை தமன்னாவுக்கு டான்ஸ் என்றால் அவ்வளவு உயிராம். முழு நீள டான்ஸ் சம்பந்தப்பட்ட படத்தில் கூடிய சீக்கிரம் நடிப்பேன் என்றும் தமன்னா கூறியுள்ளார். இதற்காகத் தான் பெரிய நடிகர்கள் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட அழைத்தாலும் தான் ஓகே சொல்வதாகவும் கூறியுள்ளார். தமன்னா ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ஒரு கோடி ரூபாய் வரை வாங்குவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X