ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் விரைவில்.. தமன்னாவின் விவகாரமான ஆசை.. பிரச்னை வராதா?
சென்னை: தமிழில் ஃபேமஸான ஹீரோயினாக வலம் வந்த தமன்னா இப்போது ஹிந்தியில் படு பிஸியாக இருக்கிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதையும் அதிகப்படுத்தியிருக்கிறார். நடிகர் விஜய் வர்மாவை காதலித்த அவர்; சில காரணங்களால் பிரேக் அப் செய்துகொண்டார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து தமன்னா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
கேடி படத்தில் வில்லியாக நடித்த தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அப்படத்துக்கு பிறகு தமிழில் அவரது மார்க்கெட் உச்சத்துக்கு போனது என்றுதான் சொல்ல வேண்டும். கோடம்பாக்கம் எங்கும் அவரது அலை அடித்ததன் காரணமாக விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பலருக்கும் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்துக்கு சென்றார்.
பரவிய வதந்திகள்: அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் எப்படி அபரிமிதமாக இருந்ததோ அதேபோல் அவரை சுற்றி கிசுகிசுவும் அதிகம் பரவியது. அதாவது பையா, சிறுத்தை என வரிசையாக கார்த்திக்கு ஜோடியாக நடித்ததால் இரண்டு பேரும் காதலிப்பதாக அப்போது பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். இதற்கிடையே தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்து அங்கேயும் தனக்கான மவுசை அதிகப்படுத்தினார்.

வீழ்ச்சி டூ எழுச்சி: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் திடீரென்று குறைந்தன. இதனால் அவரது கவனம் முழுவதும் ஹிந்தியில் சென்றது. அங்கு தனக்கு ஏற்ற ரோல்கள் கிடைத்ததால் பிஸியாக நடித்தார். மேலும் விஜய் வர்மாவை காதலிக்கவும் செய்தார். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிரேக் அப் ஆனது. இப்போது சிங்கிளாக இருக்கிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தமன்னாவின் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில், "லிப் லாக் காட்சியில் நடிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருக்கிறேன். ஆனால் விஜய் தேவரகொண்டாவுடன் மட்டும் லிப் லாக் செய்ய ஆசை" என கூறியிருந்தார். அவர் இப்படி பேட்டி கொடுத்த சில காலத்திலேயே லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் விஜய் வர்மாவுக்கு லிப் லாக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்: முன்னதாக ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் லாக் செய்ய வேண்டும் என தமன்னா சில வருடங்களுக்கு முன்பு பேசியிருந்த வீடியோவை இப்போது சிலர் ட்ரெண்டாக்கிவிட்டார்கள். இதை பார்த்த ரசிகர்களோ, 'அய்யோ இந்த வீடியோ ராஷ்மிகா கண்ணில் பட்டால் பிரச்னை வராதா?' என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











