Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹிம்மத்வாலாவில் தமன்னாவின் கங்னம்
கிரிக்கெட் வீரர்களோ, ரியாலிட்டி ஷோ நாயகர்களோ இதை ஆடாதவர்கள் இல்லை. இந்த ஸ்டைல் நடனத்தை தமன்னா இந்திபடமான ஹிம்மத்வாலா படத்தில் ஆடியிருக்கிறாராம்.
ஸ்ரீதேவி நடித்த 'ஹிம்மத்வாலா' படம் இந்தியில் மீண்டும் ரீமேக் ஆகிறது. இதை சாஜித் கான் இயக்குகிறார். ஸ்ரீதேவி நடித்த வேடத்தை தமன்னா ஏற்று நடிக்கிறார். ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தமன்னா ஆடும் ஆட்டத்தின்போது கங்னம் ஸ்டைல் நடன அசைவு வைக்கப்பட்டது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது"முதலில் குறிப்பிட்ட ஸ்டைலில் நடன அசைவு வைப்பதுபோல் ஐடியா எதுவும் இயக்குனருக்கு இல்லை. திடீரென்று அந்த நடன அசைவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். வீடு திரும்பிய நான் அதேபாணியில் உள்ள ஆட்டங்களை வீடியோவில் போட்டுபார்த்து ஆடிப்பார்த்தேன். அது சரியாக வந்தது. மறுநாள் ஷூட்டிங்கில் அந்த ஸ்டைலில் நடனம் ஆடினேன். '
'ஹிம்மத்வாலா' தவிர இந்தியில் வேறு படம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிய தமன்னா, தமிழில் அஜீத் ஜோடியாக 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதுதவிர தெலுங்கில் சில படங்கள் நடிக்கிறேன்."என்றார்
கங்னம் ஸ்டைல் நடனத்தை தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பாடலில் ஆடுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.