குவாரண்டின் நல்லது.. பழைய நினைவுகளில் பறக்கும் தமன்னா.. 2K கிட்ஸுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு இது!

சென்னை: கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு பக்கம் 53 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Recommended Video

Tamannaah Bhatia Healthy Breakfast Recipe | Lock Down

ஊரடங்கு உத்தரவால், இயற்கை காற்று மாசுபாடு உள்ளிட்டவைகளில் இருந்து தப்பித்து, நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறது.

ஷூட்டிங்கில்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகள், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பில் இருக்கின்றனர்.

பெரும் பாடம்

பெரும் பாடம்

நன்மையையும், தீமையையும் கலந்தே கொடுத்துள்ள கொரோனா வைரஸ் மனித சமூகத்திற்கு பெரும் பாடமாகவே அமைந்துள்ளது. இயற்கையை தாண்டி செயற்கையை நோக்கி ஓடிய மனித இனம், தற்போது மீண்டும் இயற்கை பக்கமாகவே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. ஆனால், இந்த பாடத்தில் இருந்து நல்ல படிப்பினையை நாம் கற்றுக் கொள்வோமா என்பது சந்தேகம் தான்.

குழந்தையாக மாறிய தமன்னா

21 நாட்கள் இந்தியா முழுவதும் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுவரை ஒன்பது நாட்களை பலரும் வீட்டை விட்டு வெளியேறாமல் கடந்து பத்தாவது நாளில் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்குறோம். இந்நிலையில், நடிகை தமன்னா குழந்தையாக மாறி தனது குழந்தை பருவ நினைவுகளை அசைப்போட்டு வருகிறார்.

க்யூட் ஆல்பம்

15 வயதில் சினிமாவில் நாயகியாக நடிக்க வந்த நடிகை தமன்னா, 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமன்னாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அடங்கிய அழகிய ஆல்பத்தை வீடியோவாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். இப்பவே இப்படி அழகா இருக்கும் தமன்னா குழந்தை பருவத்தில் இன்னமும் க்யூட்டாக இருக்கிறார்.

யோகா

15 ஆண்டுகளாக சினிமாவில் அதே அழகையும் கட்டுக் கோப்பான உடலையும் நடிகை தமன்னா மெயின்டெயின் செய்து வர அவர் செய்யும் யோகா தான் முக்கியக் காரணம். இந்த குவாரண்டின் காலத்திலும், வீட்டுத் தோட்டத்திலும், தனது அறையிலும் நடிகை தமன்னா யோகா செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X