பார்த்து.. பார்த்து.. மூச்சு வாங்க போகுது.. இவ்ளோ ஸ்பீடா யோகா செய்யாதீங்க தமன்னா!

சென்னை: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில், இன்று 4ம் நாளை பல ஹீரோயின்கள் சிரமப்பட்டு கடந்து வருகின்றனர்.

Recommended Video

Namitha Yoga Practice | Quarantine | Actor Arnaav

யோகா செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை தமன்னா, கார்டனை விட்டு, தனது ரூமுக்குள்ளே எப்படி அழகா யோகா செய்யலாம் என்பதை செய்துக் காட்டியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக இருக்கும் தமன்னா அடுத்ததாக கபடி கோச்சாக ஜ்வாலா படத்தில் நடித்து வருகிறார்.

15 வயதில்

15 வயதில்

தனது 15வது வயதில், பாலிவுட்டில் வெளியான சாந்த் சா ரோஷன் சேரா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா சமீபத்தில், திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார். தமிழில் கேடி படத்தில் மிரட்டும் வில்லியாக நடித்தபோது நடிகை தமன்னாவுக்கு வெறும் 16 வயது தான் ஆகியிருந்தது.

அழகின் ரகசியம்

அழகின் ரகசியம்

தங்க நிறம் போல ஜொலிக்கும் தமன்னாவின் அழகை கண்டு வியக்காத ரசிகர்களே தென்னிந்திய சினிமாவில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது கிளாமரால் அனைவரையும் கட்டி ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர். 15 வருடங்களாக சினிமாவில் தனது அழகை மெயின்டெயின் பண்ண தமன்னாவுக்கு உதவி வருவது யோகா தான்.

வீட்டுத் தோட்டத்தில்

தளபதி விஜய்யுடன் சுறா, தல அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள தமன்னா, ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றி வருகிறார். மேலும், பலரும் வீட்டில் இருந்து மற்றவர்களுக்கும், அரசுக்கும் உறுதுணையாக இந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். சமீபத்தில், வீட்டுத் தோட்டத்தில் யோகா செய்து தமன்னா வெளியிட்ட வீடியோ வேற லெவலில் வைரலானது.

4ம் நாள்

பிக்பாஸ் வீட்டுக்குள் நூறு நாட்கள் இருப்பது போல, பலருக்கும், இந்த 21 நாட்கள் லாக் டவுன் மிகவும் சிரமத்தை கொடுத்து வருகிறது. வொர்க்கவுட் செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்ட நடிகைகள் வீட்டிலேயே வொர்க்கவுட் செய்து வருகின்றனர். குவாரண்டின் காலத்தின் 4ம் நாளில் வீட்டு அறையிலேயே 1 மணி நேரம் யோகா செய்த வீடியோவை தற்போது டைம் லேப்ஸ் முறைப்படி வேகப்படுத்தி தமன்னா வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X