'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!

By

சென்னை: நடிகை தமன்னா வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. இப்போது தெலுங்கில் நடித்து வருகிறார்.

அந்தாதுன் தெலுங்கு ரீமேக், கோபிசந்துடன் சீட்டிமார் உட்பட சில படங்களில் நடித்து வரும் அவர், வெப் சிரீஸிலும் நடிக்கிறார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

நடிகை தமன்னாவுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சென்றபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பாசிட்டிவ் என வந்தது.

பயந்து விட்டேன்

பயந்து விட்டேன்

இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், கொரோனா தந்த பயம் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். 'எனக்கு கொரோனா உறுதியானதும் பயந்து விட்டேன்.

பிழைக்க மாட்டேன்

பிழைக்க மாட்டேன்

சிகிச்சை எடுக்கும்போது, இனி பிழைக்க மாட்டேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் அதிகமாக இருந்தது. மருத்துவர்கள் காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள் அதிக தைரியம் கொடுத்தனர். நம்பிக்கை அளித்தனர்.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

அந்த நேரத்தில், வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது என்பதும் உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் எனவும் தோன்றியது எனவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாவில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி இருக்கிறார் தமன்னா.

ஒர்க் அவுட் வீடியோ

அவர் இப்போது தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், 'தீவிரமாக இருக்க வேண்டாம். ஆனால், சரியாக இருங்கள் என்று கூறியுள்ள தமன்னா, தொடர்ந்த உடற்பயிற்சியினால் கொரோனாவுக்கு முந்தைய என் உடல் நிலைக்கு திரும்பி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

பார்த்து பண்ணுங்க

பார்த்து பண்ணுங்க

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் ஜாலியான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பார்த்து பண்ணுங்க, மைக் டைசன் ஆகவா போறீங்க? என்று ஒருவர் கலாய்த்துள்ளார். இந்த டிரெஸ்ல ரொம்ப ரொமான்டிக்கா இருக்கீங்க தமன்னா என்று ஒரு நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹைஸ்கூல் பொண்ணு

ஹைஸ்கூல் பொண்ணு

இன்னும் ஒல்லியாகிடாதீங்க.. இப்பவரை ஹைஸ்கூல் பொண்ணு மாதிரிதான் இருக்கீங்க என்று கூறியுள்ள சில ரசிகர்கள் கொஞ்சம் வெயிட் போட்டாதான் என்ன என்று கோரிக்கை வைத்துள்ளனர். 30 வயசுக்குப் பிறகும் நீங்க ஒல்லியாகவே இருப்பது ஆச்சரியமாதான் இருக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X