சேலையில் சிக்கென கவர்ச்சி காட்டிய தமன்னா.. கதவை மூடி திறந்ததும் செம ஷாக்.. என்னன்னு பாருங்க!
ஹைதராபாத்: நடிகை தமன்னா சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து விட்டு திடீரென கதவை மூடி திறந்ததும் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியா சார்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா வித விதமான கண்கவர் உடைகளை அணிந்து கொண்டு சிகப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.
கடந்த வாரம் டோலிவுட் நடிகர் வெங்கடேஷ், தமன்னா, நடிப்பில் உருவாகி உள்ள F3 படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தங்க சிலை தமன்னா
தனது 15 வயதில் இருந்தே நடித்து வருகிறார் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள தமன்னா தற்போதும் முன்னணி ஹீரோயினாக மாஸ் காட்டி வருகிறார். 32 வயதாகும் நடிகை தமன்னாவுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. காதல், கிசுகிசு என எதுவுமே அதிக அளவில் கிளம்பாதது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸில் தமன்னா
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் கெத்தாக ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் ஒய்யார நடை போட்டு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். அங்கு பல இடங்களுக்கு சுற்றுலாவும் சென்று வந்திருந்தார் தமன்னா.

சேலையில் செம கவர்ச்சியாக
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தமன்னா கரும்பச்சை நிற சேலையில் செம ஹாட்டாக வளைந்து நெளிந்து போஸ் கொடுத்தபடி போட்டுள்ள வீடியோ ரசிகர்களுக்கு பயங்கர இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது. கதவை திறந்து மூடியதும் ஆளே வேற மாதிரியாக மாறிவிட்டார் தமன்னா.

ஆணாக மாறிய தமன்னா
சேலையில், படு கவர்ச்சியாக காட்சி தந்த நடிகை தமன்னா, கதவு ஒன்றுக்கு பின்னால் சென்று அதை மூடித் திறந்ததும் அப்படியே ஆணாக மீசை வைத்துக் கொண்டு ஆண்கள் அணியும் உடையில் தோன்றி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். ஏன் இப்படி திடீரென தமன்னா ஆணாக மாறி உள்ளார் என்ன விஷயம் என குழம்பித் தவிக்கும் ரசிகர்களுக்கு கேப்ஷனில் விடை அளித்துள்ளார்.
F3 பட புரமோஷன்
இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸ்டா, வருண் தேஜ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி படமாக கடந்த வாரம் வெளியான F3 படத்தை புரமோட் செய்யவே இப்படி ஆண் வேடமிட்டு தமன்னா போஸ் கொடுத்துள்ளார். முன்னதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரியை புரமோட் செய்யவும் தமன்னா மீசை வைத்த மாணிக்கமாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











