twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பப்பாளி பழ நடிகை!

    |

    சென்னை : சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் வெளியான வேதாளம் திரைப்படம் தமிழில் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது.

    அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் இருவேறு கெட்டப்புகளில் வந்து அசத்தி இருப்பார்.

    சமூக பிரச்சனைகளை பேசும் மாஸ் ஹிட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்...பிறந்தநாள் ஸ்பெஷல் சமூக பிரச்சனைகளை பேசும் மாஸ் ஹிட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்...பிறந்தநாள் ஸ்பெஷல்

    இப்பொழுது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக பிரபல பப்பாளி பழ நடிகை நடிக்க உள்ளார்.

    அண்ணன்-தங்கை பாசத்தை

    அண்ணன்-தங்கை பாசத்தை

    அஜித்குமார் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் வீரம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற தொடங்கினர் அந்த வகையில் வெளியான வேதாளம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

    அதிரடி காட்டும் தாதா

    அதிரடி காட்டும் தாதா

    மேலும் அஜித்குமார் இதில் இரு வேறு கெட்டப்புகளில் வந்து அசத்தி இருப்பார். முதல் பாதியில் சாதுவான அண்ணனாக டாக்ஸி டிரைவராக வருகிறார் பிளாஷ்பேக்கில் அதிரடி காட்டும் தாதாவாக வந்து பட்டையை கிளப்பி இருப்பார். மங்காத்தா படத்தை தொடர்ந்து வேதாளம் படத்தில் தான் அஜித்குமார் நெகட்டிவ் ரோலில் நடித்து இருப்பார்.

    போலோ சங்கர்

    போலோ சங்கர்

    அஜித்தின் வித்தியாசமான நடிப்பு மாஸான கதாபாத்திரம் அண்ணன் தங்கை பாசம் என அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவர்ந்து திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில் வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

    தெலுங்கில் தமன்னா

    தெலுங்கில் தமன்னா

    தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இப்பொழுது அது குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது .

    தமிழில் ஸ்ருதிஹாசன்:

    தமிழில் ஸ்ருதிஹாசன்:

    தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலோ சங்கர் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Actor Keerthy Suresh is set to play Chiranjeevi's sister in the upcoming Telugu remake of Vedalam, according to reports. Same time, Talks are going that Actress Tamannaah to pair with Chiranjeevi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X