தமன்னா டேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுத்தார்..கூச்சமே இல்லாமல் பேசிய காதலன்..விளாசிய பயில்வான்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, முதன் முதலில் டேட்டிங் சென்றது பற்றி பேசினார்.
நடிகர் விஜய் வர்மா அளித்துள்ள பேட்டியில், லஸ்ட் ஸ்டோரிஸில் நானும் தமன்னாவும் நடிக்கும்போது டேட்டிங் செல்ல தொடங்கவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க விரும்பினோம். அந்த பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அப்போது, தமன்னாவிடம் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று சொன்னேன். இந்த நாளில் இருந்து 20 முதல் 25 நாளைக்கு பிறகு நாங்கள் டேட்டிங் சென்றோம் என்றார்.

இந்த செய்தி இப்போது பேசு பொருளாகி இருக்கும் நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இதுகுறித்து பேசி உள்ளார். முன்பு எல்லாம் பத்திரிக்கையாளர்கள் இது போன்ற விஷயத்தை,தேடி செல்வோம். ஆனால், இந்த காலத்து நடிகர், நடிகைகள் எங்களுக்கு எந்தவித சிரமமும் வைக்காமல் அவர்களாகவே அனைத்தையும் முந்திக்கொண்டு சொல்லிவிடுகிறார்கள்.
நடிகர் விஜய் வர்மா பாலிவுட்டில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி என அனைத்து கசமுசாவும் இருந்தது. அந்த படத்தில் படு கவர்ச்சியாக தமன்னா நடித்திருந்தார். இதில் நடித்ததற்காக தமன்னா கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தமன்னாவின் அழகிற்காக அனைவரும் இதை ரசித்துப்பார்த்தார்கள். இதற்காக தமன்னாவிற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது.
அண்மையில் தமன்னாவுடனான காதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வர்மா, லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்தோம்.இதைத்தொடர்ந்து, அவரை ஒரு நைட் பார்ட்டியில் சந்தித்தேன் அப்போது நான், அவரிடம், ஒரு நாள் முழுவதும் என்னிடம் இருக்க வேண்டும், டேட்டிங் செல்லலாமா என்று கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். டேட்டிங்கில் எனக்கு தமன்னா சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூச்சமே இல்லாமல் பேசி இருக்கிறார். இதனால், விஜய் வர்மாவிற்கு பிரச்சனை இல்லை. தமன்னாவிற்குத் தான் இதனால், தர்ம சங்கடம் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











