காதல் தோல்விக்கு பின் தமன்னா என்ன சொல்லிருக்காங்க பாருங்க.. விஜய் மீது மறைமுக தாக்குதல்?
மும்பை: நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது காதலிக்க தொடங்கினார்கள். இரண்டு பேரும் ஜோடியாக வெளியே வருவது, ஒருவரையொருவர் புகழ்ந்து பேசுவது என்று இருந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர்கள் இப்போது தங்களது காதலை பிரேக்கப் செய்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை இரண்டு பேரும் அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தமன்னா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா. தமிழில் அவர் வில்லியாக அறிமுகமானார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் அவர் ஹீரோயினாக ஜொலிக்க தொடங்கினார். விஜய், அஜித், சூர்யா, ரவி மோகன், தனுஷ், கார்த்தி என பலருடன் ஜோடி போட்டு நடித்த அவர்; கோலிவுட்டில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேலாக டாப்பில் இருந்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பிஸியாக இருப்பது போன்றே தெலுங்கிலும் அவர் படு பிஸியாக இருந்தார்.
வாய்ப்புகள் குறைந்தன: ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும் அவ்வப்போது தமிழில் நடித்துவந்த அவர் ஒருகட்டத்தில் தமிழிலிருந்து காணாமலே போனார். அதேசமயம் தெலுங்கில் அவருக்கு சரளமாக வாய்ப்புகள் குறையவில்லை. அதனை பயன்படுத்தி சில காலம் அங்கும் தாக்குப்பிடித்தார். இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை அங்கும் அவரின் மார்க்கெட் அதள பாதாளத்துக்கு சென்றது. இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த தமன்னா அதிரடியாக ஒரு முடிவெடுத்தார்.

பாலிவுட்டில் என்ட்ரி: அதன்படி பாலிவுட்டுக்கு சென்றார். ஏற்கனவே சில ஹிந்தி படங்களில் அவர் நடித்திருந்தாலும் தென்னிந்திய சினிமா ஒட்டுமொத்தமாக கைவிட்ட பிறகு ஹிந்திக்கு சென்ற அவரை பாலிவுட் அன்போடு அரவணைத்தது. அதன்படி தொடர்ந்து படங்களில் நடித்தார். நடிப்பது மட்டுமின்றி கிளாமரிலும் உச்சம் தொட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தார். ஆந்தாலஜியாக உருவான அதில் அவருக்கு ஒரு கதையில் ஜோடியாக விஜய் வர்மா நடித்தார்.
விஜய்யுடன் காதல்: அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நைட் அவுட்டிங், பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வது, ஒருவரையொருவர் புகழ்ந்து பேசுவது என தொடர்ந்து காதலோடு பழகிவந்தார்கள். இந்த வருடத்தின் இறுதிக்குள் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அப்படித்தான் அவர்கள் இரண்டு பேருமே பேட்டிகளும் கொடுத்துவந்தார்கள். எப்படியோ தமன்னா ஒரு காதலருடன் இணைந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் நிம்மதியாக இருந்தார்கள்.

பிரிந்த ஜோடி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தமன்னாவும், விஜய் வர்மாவும் தற்போது பிரிந்திருக்கிறார்கள். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக திருமணத்துக்கு தமன்னா ஆர்வம் காட்டவில்லை; அதனால்தான் விஜய் வர்மா இந்த உறவிலிருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. எப்படியாவது அவர்கள் மீண்டும் இணைந்துவிடமாட்டார்களா என்று ஒருதரப்பினர் எதிர்பார்க்கத்தான் செய்கிறார்கள்.
தமன்னாவின் போஸ்ட்: அவர்கள் எதிர்பார்த்தபடி சமீபத்தில் இரண்டு பேரும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சரியாகக்கூட பேசிக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாழ்க்கையில் அற்புதங்கள் என்பது அதுவாகவே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள பழக வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை மறைமுகமாக விஜய் வர்மாவை இந்தப் போஸ்ட் மூலம் தம்மு தாக்கியிருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











