தமன்னாவின் அடுத்த படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. தேதி குறித்த படக்குழு
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்குள் இப்போது அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்தனர். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் தமிழில் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது.
உச்சபட்ச கவர்ச்சி: ஹிந்திக்கு சென்ற தமன்னா பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்கூட ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார். இந்நிலையில் தமன்னா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாட மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அவர் பெற்றிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடேலா 2: கடைசியாக அவர் ஒடேலா 2 படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே அதில் இடம்பெற்றிருந்த வசனங்களை வைத்து ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்தார்கள். அப்படிபட்ட சூழலில்தான் படமானது கடந்த மாதம் வெளியானது. படம் படுதோல்வியை சந்தித்தது. தியேட்டரில்தான் ஒழுங்காக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை; ஓடிடியிலாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு அந்த ஏரியாவிலும் ஏமாற்றமே கிடைத்தது.
அடுத்த பட ரிலீஸ்: இந்நிலையில் அவர் அடுத்ததாக வ்வான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்திருக்கிறார். இப்படம் ஹாரர் ஜானரில் உருவாகிறது. அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்திருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வ்வான் படம் அடுத்த வருடம் மே 15ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











