பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகம்... ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.
இதனை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் குறிப்பிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் தமன்னா.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் 2 - ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது.
ஆர்யா - நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர். சந்தானம் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோவாகவே வந்தார். ராஜேஷ் எம் இயக்கினார்.

ஆர்யா
இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டார். இதுபற்றி பலரிடமும் கருத்துக் கேட்டபோது, கட்டாயம் எடுக்க வேண்டும் என்றே கூறியிருந்தனர். ஆர்யாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்டதால், படவேலைகள் தொடங்கின.

நயன்தாரா
இதில் ஆர்யா ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடந்தது. நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா என யோசித்தனர். ஆனால் நயன்தாரா இதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர்.

தமன்னா
தமன்னா தற்போது இரு இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி' தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இப்படங்கள் முடிந்ததும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வருகிறார்.

ஆர்வம்
தமன்னா கூறும்போது, ‘காமெடி படங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். காமெடி கலந்த ஹீரோயினாக நான் நடித்த படங்கள் கமர்ஷியலாக நன்றாகப் போயிருக்கின்றன. பாஸ் என்கிற பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











