விரைவில் திருமணம்.. என்னது தமன்னா அந்த விஷயத்தை செய்துவிட்டாரா?.. அதிர்ச்சியில் திரைத்துறை
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமன்னா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததிருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காவாலா தமன்னா: பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தமன்னா வீட்டில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற பேச்சு ஓடுகிறது. எனவே விரைவில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.
சம்பள உயர்வு: இந்நிலையில் தமன்னா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்வரை ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர் தற்போது 5 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களும், திரைத்துறையினரும் இந்த அளவு சம்பளத்தை உயர்த்த அவர் என்ன பெரிய ஹிட் கொடுத்துவிட்டார் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











