கிளாமராக ஆடினால் என்னங்க தப்பு?.. அப்படி பார்க்காதீங்க.. போட்டு பொளந்து எடுத்த நடிகை தமன்னா

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கிளாமராக நடனம் ஆடுவது குறித்து தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

Tamannah Open Talks about Glamour Songs And Glamour dance Performance

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Tamannah Open Talks about Glamour Songs And Glamour dance Performance

காவாலா தமன்னா: பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கிடையே அவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதேபோல் தமிழில் அவர் நடிப்பில் அரண்மனை 4 படம் உருவாகியிருக்கிறது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

தமன்னா பேட்டி: முன்னதாக காவாலா பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதற்கு எதிராக தமன்னாவை சிலர் விமர்சித்தனர். இந்தச் சூழலில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”ஒரு பேட்டியில் நான் ஒருமுறை, நடிகர்கள் என்பவர்கள் நல்ல ஆடைகளை உடுத்தி வேலை செய்யும் வேலை ஆட்கள் என்று கூறியிருந்தேன். இந்தத் துறையில் கிடக்கும் பணம், புகழ், கிளாமர் என எல்லாமும் பிடிக்கும். இதையெல்லாம் பிடிக்காது என்று சொன்னால் அது நியாயமாக இருக்காது. நான் இருக்கும் இடம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.

வேறு மாதிரி இருக்கும்: இந்தத் துறை ரொம்ப அழகாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது வேறு மாதிரியாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து ஒரு விஷயத்தை ரசிகர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனால் அதை பார்க்கும்போது எந்த மெனக்கெடலும் இல்லாமல் செய்ததுபோல் இருக்கும். அதை நிகழ்த்துவதற்கு மனதளவிலும், எமோஷனல் அளவிலும், உடல் அளவிலும் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்.

பார்வையாளர்கள் மாற வேண்டும்: கிளாமர் பாடல் பற்றிய ரசிகர்களின் பார்வை மாற வேண்டும். உண்மையில் கிளாமர் என்பது கொண்டாடும் செயல்முறைதான். இப்படியான ஒரு பார்வையை பெண்களும் கொண்டுவர வேண்டும். அந்தப் பாடலில் இருக்கும் சில விஷயங்கள் கீழ்த்தரமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவுதான்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X