ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ ... பிங்க் ட்ரெஸ்ஸில் ஜொலி ஜொலிக்கும் தமன்னா!
மும்பை : நடிகை தமன்னா தெலுங்கில் நடித்துள்ள 11 ஹவர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தமிழில் இப்போதைக்கு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் தெலுங்கில் கைநிறைய அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் மட்டுமல்லாமல் போட்டோ ஷூட்களிலும் மிரட்டி வரும் தமன்னா இப்பொழுது பஞ்சு மிட்டாய் போல மிளிரும் பிங்க் கலர் ட்ரெஸ்ஸில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக வைரல் ஆகி உள்ளார்.

பையா
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா முதல் படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். பிறகு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க வியாபாரி, கல்லூரி, படிக்காதவன் ,ஆனந்த தாண்டவம், பையா, சுறா,சிறுத்தை என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

தெலுங்கில் கைவசம் அரை டஜன்
பளபளக்கும் தேகம் பட்டுப் போன்ற மேனி என எப்பொழுதும் பப்பாளி பழம் போல பளீரென இருக்கும் தமன்னாவிற்கு எந்த ஆடை அணிந்தாலும் கச்சிதமாக இருக்க படங்களை விடவும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்சி விஷால் கூட்டணி இணைந்த ஆக்சன் படத்தில் ஹீரோயினாக நடித்த தமன்னா அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இருப்பினும் தெலுங்கில் கைவசம் அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

த்ரில்லர் வெப்சீரிஸ்
தமிழில் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸிலும்,தெலுங்கில் 11 ஹவர் என்ற த்ரில்லர் வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதில் 11 ஹவர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது அதற்கான ப்ரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கியுள்ளார்.

ஒருபக்க தொடையழகு தெரிய
ஏற்கனவே பேபி பிங்க் கலரில் இருக்கும் தன்னுடைய தேகத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்து வரும் நடிகை தமன்னா இப்பொழுது ரோஸ் கலர் டிரஸ்ஸில் ஒருபக்க தொடை அழகு தெரிகின்ற அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டிக்கொண்டு ஜொலி ஜொலிக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகி வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ.. பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











