படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் திடீர் பாதிப்பு.. நடிகை தமன்னாவுக்கு கொரோனா? வேகமாக பரவும் நியூஸ்!
ஐதராபாத்: பிரபல நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன.

வேகமாக பரவுகிறது
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 374 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,01,782 ஆக உயந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்
நடிகர் நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், நடிகர் அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டுள்ளனர்.

கொரோனா அறிகுறி
இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தமன்னா சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். 'என் பெற்றோருக்கு கடந்த வாரம் இறுதியில் கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தன. பரிசோதனை செய்தோம்.

நடிகை தமன்னா
என் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார். தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்த நடிகை தமன்னாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாம்.

மருத்துமனை
அதில அவருக்கு பாசிட்டிவ் என வந்ததாகவும் இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தெலுங்கு மீடியா செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது நடிகை தமன்னா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











