சிவா, அஜீத், தமன்னா: மீண்டும் சேரும் 'வீரம்' வெற்றிக் கூட்டணி?
சென்னை: 'வீரம்' சிவா அஜீத் குமாரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறாராம்.
இயக்குனர் சிவா தமிழில் இதுவரை சிறுத்தை, வீரம் ஆகிய 2 படங்கள் தான் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டுமே வெற்றிப் படங்கள் என்பதால் கோடம்பாக்கத்தின் கண் முழுவதும் அவர் மீது தான்.
இந்நிலையில் சிவாவும், அஜீத்தும் மீண்டும் ஒன்று சேர்ந்து படம் பண்ணவிருக்கிறார்கள். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது என்று கூறப்படுகிறது.

மீண்டும் தமன்னா
வீரம் படத்தை அடுத்து இந்த படத்திலும் தமன்னாவையே ஹீரோயினாக நடிக்க வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

2வது முறை
இந்த படத்திலும் தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனால் அவர் அஜீத்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை ஆவார். தமிழில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு வீரம் படம் தான் ஒரு பிரேக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாவின் நாயகி
சிவா தமிழில் முதன்முதலில் எடுத்த சிறுத்தை படத்திலும், அதை தொடர்ந்து இயக்கிய வீரம் படத்திலும் ஹீரோக்கள் தான் வேறு, வேறு நாயகி தமன்னா தான்.

தமன்னா
சிவா அஜீத்தை வைத்து மீண்டும் எடுக்கும் படத்திலும் தமன்னா ஒப்பந்தம் ஆனால் தொடர்ந்து ஒரே இயக்குனரின் 3 படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை பெறுவார்.


Click it and Unblock the Notifications











