அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை சேர்ந்திருக்காங்களா... சூப்பரா இருக்கே

சென்னை : கடந்த ஆண்டில் வெளியான காதம்பரி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அகிலா நாராயணன்.

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இவர் அமெரிக்க ராணுவத்திலும் இணைந்துள்ளார்.

தமிழ் பட நாயகி

தமிழ் பட நாயகி

அமெரிக்கா வாழ் தமிழ் பெண் அகிலா நாராயணன். இவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சினிமாவில் கதாநாயகியாக இணைந்துள்ளார். கடந்த 2021ல் வெளியான காதம்பரி என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் படம். நாயகியாக மட்டுமின்றி பாடகியாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டார்.

ராணுவத்தில் இணைய விருப்பம்

ராணுவத்தில் இணைய விருப்பம்

ஆனால் தன்னுடைய களம் சினிமா இல்லை என்றும் ராணுவத்தில் இணைய வேண்டும் என்றும் இவர் கூறியபோது இவரது குடும்பத்தினர் அதற்கு முட்டுக்கட்டை போடவில்லை. மாறாக சந்தோஷத்துடன் சம்மதித்தனர். தற்போது கடுமையான பயிற்சிகளை முடித்து பட்டம் பெற்றுள்ள அகிலா, அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் முதல் தமிழ் நடிகை

அமெரிக்க ராணுவத்தில் முதல் தமிழ் நடிகை

இதன்மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ள முதல் தமிழ் நடிகை என்ற பெருமை அகிலாவிற்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் தன்னுடைய இசைத் திறமையையும் வீணாக்க விரும்பாத அகிலா, ஆன்லைன் மூலம் நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

கடுமையான முயற்சி

கடுமையான முயற்சி

சினிமாவில் இணைந்தவுடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதையும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்வதையுமே நடிகைகள் விரும்புவார்கள். ஆனால் அகிலாவின் இந்த ஆசை அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் அகிலா இந்த முயற்சியை மேற்கொண்டு தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

இதையடுத்து அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தற்போது ராணுவ உடையில் அகிலா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் கடுமையான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது மிகவும் சவாலானது. இந்நிலையில் அதை சாதத்து காட்டியுள்ளார் அகிலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X