பாலிவுட்டில் நடிக்கும் சாண்ட்ரா

By Mayura Akilan

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் திரைஉலகில் காலடி எடுத்துவைத்த சாண்ட்ரா இப்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த சாண்ட்ரா, 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

யுரேகா இயக்கியுள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷ, ஜே.சதீஷ்குமார் உலகம் முழுவதும் வெளியிடுகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

பாலிவுட் வாய்ப்பு

பாலிவுட் வாய்ப்பு

இந்த நிலையில் இப்படத்தின் நாயகி சாண்ட்ராவுக்கு இந்திப் பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. டைரக்டர் அந்தோணி டிசோசாவின் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடிக்கும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இம்ரானின் காதலி

இம்ரானின் காதலி

இந்த பாலிவுட் வாய்ப்பு குறித்து கூறிய சாண்ட்ரா, "இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பட வாய்ப்பு பற்றி சான்ட்ரா கூறுகையில், "இம்ரானைக் காதலிப்பவளாக நான் இந்தப் படத்தில் தோன்றுகிறேன்.

நான் பொருத்தமானவள்

நான் பொருத்தமானவள்

என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த டைரக்டர் அந்தோணி நான் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவளாக இருப்பேன் என்று தேர்ந்தெடுத்துள்ளார்.

சில காட்சிகள்தான்

சில காட்சிகள்தான்

நான் சில காட்சிகளில் மட்டும் இதில் தோன்றினாலும் பாலிவுட்டில் நுழைவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று குறிப்பிட்டார்.

சமீரா ரெட்டியுடன்

சமீரா ரெட்டியுடன்

சமீரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X