சுறா... அப்படியே ஷாக்காயிட்டேன்!- தமன்னா

By Sudha

Tamannah
சுறாவின் தோல்வி தமன்னாவை பெரிதும் பாதித்துள்ளது. விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி போட்டு தமன்னா நடித்த படம் சுறா.

சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வரிசையில், விஜய் இருக்கிறார் என்பதால் அவருக்கு ஜோடியாக தான் நடித்த இந்தப் படம் தனது கேரியரை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று தமன்னா எதிர்ப்பார்த்தார்.

ஆனால், பாக்ஸ் ஆபீஸில் அதலபாதாளத்தில் விழுந்தது சுறா. அது மட்டுமல்ல, விஜய்யின் கேரியரையும் படுவீழ்ச்சி காணச் செய்தது. விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என சகல தரப்பினரையும் நஷ்டத்துக்குள்ளாக்கியது இந்தப் படம்.

இந்தப் படத்தின் தோல்வி குறித்து இப்படிக் கூறுகிறார் தமன்னா:

"சுறா பெரிய லெவலுக்குப் போகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்குப் பெரிய ஷாக் கொடுத்து விட்டது இந்தப் படம். அயன், படிக்காதவன், கண்டேன் காதலை மற்றும் பையா என தொடர் வெற்றிப் படங்களாக அமைந்த எனது கேரியரில் சுறாதான் பெரிய தோல்விப் படம்.

ஒரு படத்தின் வெற்றியைக் கணிப்பது எத்தனை கஷ்டமான காரியம் என்பதை சுறா புரிய வைத்துள்ளது. ரசிகர்களைத் திருப்திப்படுத்தாவிட்டால், யார் நடித்தாலும் படம் ஓடாது என்பதைப் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.

இப்போது நான் பெரிதும் நம்புவது தில்லாலங்கிடி படத்தைத்தான். இந்தப் படம் ஏற்கெனவே தெலுங்கில் பெற்ற வெற்றிதான் அந்த நம்பிக்கைக்குக் காரணம்" என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X