Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகைகளின் விலைமாது கேரக்டர் மோகம்!
அதென்னமோ தெரியவில்லை... தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நாயகிகள் சீக்கிரமே விலைமாது வேடம் போடத் துடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் ரிடையர்மெண்ட் நேரத்தில்தான் இந்த வேடத்துக்கு வருவார்கள் அல்லது புரட்சிப் பெண்ணாக நடிப்பார்கள்.
குறிப்பாக சமீப படங்களில் டாப் ரேஞ்சில் இருக்கும் நடிகைகள் கூட இந்த வேடம்தான் வேண்டும் என்று விரும்பி ஏற்கிறார்களாம்.
சரிதா
பழைய நடிகைகளில் சரிதா இந்த வேடத்தில் நடித்தார். அது ரஜினி நடிப்பில் கே பாலச்சந்தர் நடித்த தப்புத் தாளங்கள். இதில் ரஜினி - சரிதா இருவரின் நடிப்புமே க்ளாஸ் ரகமாக இருந்தது.
சினேகா
சமகாலப் படங்களை எடுத்துக் கொண்டால், செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் சினேகா விலை மாது வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
ரீமா சென்
ரீமா சென் இப்போது திருமணம், குழந்தை என செட்டிலாகிவிட்ட ரீமா சென்னும் பாலியல் தொழிலாளி வேடம் போட்டார். ஆனால் இது வங்காள மொழிப் படம். தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
அனுஷ்கா
சிம்பு நடித்த வானம் படத்தில் விலைமாதுவாக மாறியவர் அனுஷ்கா. செக்கச் செவேல் லிப்ஸ்டிக்கும் தொப்புளுக்குக் கீழே புடவையுமாக கவர்ச்சியில் கிறங்கடித்தார்.
ஸ்ரேயா
அடுத்து ஸ்ரேயாவின் முறை. சிவாஜி படம் மூலம் உச்சத்துக்குப் போன ஸ்ரேயா, இப்போது தெலுங்கில் மட்டும்தான் நடிக்கிறார். பவித்ரா என்ற படத்தில் அவர் விலைமாது வேடத்தில் வருகிறார்.
இப்போ... ஸ்ருதிஹாஸன்
மேலே சொன்ன நடிகைகளாவது நடிக்க வந்து பெரிய ரேஞ்சுக்குப் போய்விட்ட பிறகு விலைமாது வேடத்தில் வந்தார்கள். ஆனால் ஸ்ருதிஹாஸன் இன்னும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கக் கூட இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என ஆங்காங்கே பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அவர், இப்போது ஒரு இந்திப் படத்தில் முழுக்க முழுக்க விலைமாது வேடம் ஏற்றுள்ளார்.
ஏன் இந்த விலைமாது வேட மோகம்?
இதற்குக் காரணம், மிக எளிதாக அதிக விளம்பரம் கிடைப்பது மற்றும் அதிகமாக தங்கள் அழகை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதுதான் என்கிறார்கள் இயக்குநர்கள். இந்த பப்ளிசிட்டியே அதிக சம்பளத்துக்கான அடிப்படை என்பது தெரிந்த விஷயம்தானே!