தயாரிப்பாளரை 'தம்' கட்ட வைத்த முமைத்!

வழக்கமாக முத்தக் காட்சி, அரை நிர்வாணக் காட்சி, கூடுதல் கவர்ச்சி, நீச்சல் குள காட்சி என்றால்தான் நடிகைகள் கூடுதல் சம்பளம் கேட்பார்கள். ஆனால் முமைத்கான் இதில் வித்தியாசமானவர். கவர்ச்சிகரமாக நடிக்க அவர் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் ஒரு காட்சிக்காக அவர் கூடுதல் சம்பளம் கேட்டு அதை வாங்கியும் விட்டார்.
அந்தப் படம் பெளர்னமி நாகம். இப்படத்தில் முமைத்தான் நாயகி. படத்தில் அவர் தம் அடிப்பது போல ஒரு காட்சி வருகிறதாம். இந்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என முமைத்திடம் இயக்குநர் யார் கண்ணன் கூறியபோது மறுத்து விட்டாராம். இதையடுத்து உட்கார வைத்து காட்சியை விளக்கியுள்ளார் இயக்குநர்.
நீண்ட யோசனைக்குப் பிறகு சரி என்று கூறிய முமைத், ஆனால் இதற்கு என கூடுதலாக சம்பளம் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை இயக்குநர் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளரிடம் இதை அவர் கூற, பஃப் அடிக்காமேலேய அவருக்கு காது, மூக்கில் புகை வந்து விட்டதாம். இருந்தாலும் அந்தக் காட்சி அவசியம் என்று இயக்குநர் வலியுறுத்தியதால் முமைத் கேட்ட கூடுதல் சம்பளத்தைத் தர ஒத்துக் கொண்டாராம்.
இதையடுத்து இயக்குநர் கூறியபடி தம் அடித்து நடித்துக் கொடுத்தாராம் முமைத். ஆனால் கொடுமையிலும் கொடுமையாக, இந்தக் காட்சியை இப்போது சென்சாரில் கட் செய்து விட்டனராம்.


Click it and Unblock the Notifications











