தெலுங்கு படத்திற்கு புரோமோஷன்.. தமிழ் படம்னா தக்காளி தொக்கா? நயன்தாராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் வரும் 12ஆம் தேதி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்துள்ள படமான, "மன சங்கர வரபிரசாத் கரு" படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன்களில் நயன்தாரா பங்கு பெற்றுள்ளது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் உருவாக்கி உள்ளது.

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்து கொள்ளமாட்டார். இதனை அவர் ஒரு விதி முறையாக பின்பற்றி வருகிறார். படங்களில் நடிப்பதுடன் சரி. மற்றபடி, படம் வெளியாகும் காலத்தில் பேட்டிகள் கொடுப்பது, ஓடி ஓடி ரசிகர்களை சந்தித்து, தனது படத்தை புரோமோட் செய்ய மாட்டார். இப்படி இருக்கும்போது,நயன்தாரா தான் தற்போது நடித்துள்ள தெலுங்கு படமான மன சங்கர வரபிரசாத் கரு படத்தின் புரோமோஷன்களில் கலந்து கொண்டுள்ளார். அதாவது, நயன்தாராவும் படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி உடன் இணைந்து புரோமோசன் வீடியோவில் நடித்துள்ளார்.

Tamil Cinema Fans Slams Nayanthara Who Participated chiranjeevi Film Promotion
Photo Credit:

தமிழ் படங்கள்: இது ரசிகர்கள் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், தெலுங்கு ரசிகர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நயன்தாராவை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் நயன்தாராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது, தெலுங்கு படம் என்றால் புரோமோஷன்களில் கலந்து கொள்கிறீர்கள், தமிழ் படத்தில் கலந்து கொள்வது இல்லை. தமிழ் படம் என்றால் உங்களுக்கு தரக்குறைவாக உள்ளதா என்று கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் விமர்சனம்: அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் நயன்தாரா இதற்கு முன்னர் புரோமோஷன்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் போது, இனி வரும் காலங்களில் தனது படங்களின் புரோமோஷன்களில் கலந்து கொள்ள முடிவெடுத்து இருக்கலாம். அப்படி இருக்கும்போது, இது முதல் படம் என்பதால் இந்த படத்தில் இருந்தே புரோமோஷன்களில் கலந்து கொள்ள முடிவெடுத்து இருக்கலாம் என்றும் பேசி வருகிறார்கள். இவரது நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X