காந்தக்கண்ணழகி…. ஸ்டார்ட் மியூசிக்…

By Mayura Akilan

தமிழ்சினிமாவில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு செல்லப்பெயர் சூட்டியிருப்பார்கள் ரசிகர்கள். ஒரு நடிகையின் சிரிப்பு அழகென்றால்... ஒரு நடிகையின் பேச்சு கவர்ச்சியாக இருக்கும். மற்றொரு நடிகைக்கோ கண்கள் அழகாக இருக்கும்.

இன்றைக்கு ஒன்றிரண்டு படத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் பீல்ட் அவுட் ஆகும் நடிகைக்கு மத்தியில் ஒரே நேரத்தில் 5 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களின் நடிப்போடு சில ஸ்பெசல் அம்சங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விடவே உடனே ரசிகர்மன்றம் ஆரம்பித்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் வரை போய்விடுவார்கள்.

இப்படி ரசிகர்களை கவர்ந்த அவர்களை கிறங்கடித்த கனவுக்கன்னிகளைப் பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

ஹன்சிகா

ஹன்சிகா

பப்ளி கேர்ள் ஹன்சிகாவிற்கு சிரிப்புதான் அழகு என்கின்றனர் ரசிகர்கள். கண்களை சிமிட்டி சிரிக்கும் சிரிப்பில் ஒரு குழந்தைத்தனம் தெரிகிறதாம். அதுதான் சின்னக்குஷ்பு என்று பெயரெடுக்க காரணமாகிவிட்டது.

நஸ்ரிஷா நஷீம்

நஸ்ரிஷா நஷீம்

இன்றைய இளம் ஹீரோக்களின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் நஸ்ரியாதான். அந்த கண்கள்.... என்னவோ செய்கிறது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆறாடி உயரம்தான் அனுஷ்காவிற்கு அழகாம். புடவையோ, மாடர்ன் உடையோ அதுதான் அம்சமாக பொருந்துகிறதாம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

உதடுகள் காஜல் அகர்வால் ஸ்பெசல் என்கின்றனர் ரசிக கண்மணிகள். ஒரு காலத்தில் ரோஜாவிற்கு உதட்டழகி பெயர் சூட்டினர் ரசிகர்கள்.

சமந்தா

சமந்தா

காந்தக்குரலுக்கு சொந்தக்காரி சமந்தா. அழகோடு அந்த குரல் கூடுதல் கவர்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

அழகு, நடனம், நடிப்பு, இசை என பல திறமைகளை கொண்டுள்ள ஸ்ருதி மொத்த பெர்சனாலிட்டியும் பிடிக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

தமன்னா

தமன்னா

சோகமாக தோற்றத்தோடு இருக்கும் தமன்னாவிற்கு தொடை அழகாம். அவரது ரசிகர்களின் கருத்து இது.

நயன்தாரா

நயன்தாரா

ஆரம்பத்தில் ரசிகர்களை அதிகம் கவராத நயன்தாரா பில்லா படத்திற்குப் பின்னர் கூடுதல் கவனத்தை ஈர்த்தார். கவர்ச்சி மட்டுமல்லாது கூடுதல் நடிப்பும் இருக்கிறதாம் நயன்தாராவிடம்

திரிஷா

திரிஷா

பத்தாண்டுகளுக்கு மேலாக திரை உலகில் இருக்கும் திரிஷாவிற்கு அந்த பளபளப்புதான் கூடுதல் கவர்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்.

ஷ்ரேயா

ஷ்ரேயா

சில படங்களிலேயே பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாவிற்கு தனி கிரேஸ் என்கின்றனர் ரசிகர்கள்.

சிம்ரன்

சிம்ரன்

இடுப்பழகி சிம்ரனை அடித்துக் கொள்ள தமிழ்சினிமாவில் இன்னும் எந்த நடிகையும் வரவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X