அழகா, அனகா!

அமலா என்பதுதான் அனகாவின் இயற்பெயர். ஆனால் அதே பெயரில் முன்பு ஒரு பிரபலமான நடிகை இருந்ததால், அனகா என்று அவருக்குப் பெயர் மாற்றி விட்டார் சிந்துசமவெளி படத்தின் இயக்குநர் சாமி.
'சர்ச்சை' சாமி என்பதால் இப்படம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளார் அனகா.
அனகாவுக்கு இது முதல் படமல்ல. ஏற்கனவே வீரசேகரன் படத்தில் நடித்தவர்தான் இவர். அதில் இவரது பெயர் அமலா பால். அந்தப் பெயர் தனக்குத் தராத லாபத்தை, அனகா என்ற பெயர் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாராம் அனகா.
2வது படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டன அனகா, அடுத்த படமான மைனாவுக்குத் தயாராகி விட்டார். இதை இயக்கப் போவது பிரபு சாலமன். இப்படத்திலும் அனகாவுக்கு நல்ல கேரக்டராம்.


Click it and Unblock the Notifications











