For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    நான் எப்போதுமே கமல் ரசிகை-கூறுகிறார் திரிஷா

    By Sudha
    |
    Trisha
    எப்போதுமே எனது மனம் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்று கூறியுள்ளார் திரிஷா.

    கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடை இடையே அவ்வப்போது பேட்டிகளையும் எடுத்து விட்டு வருகிறார் திரிஷா.

    அப்படி அவர் லேட்டஸ்டாக கொடுத்த பேட்டியில் தனது மனம் கவர்ந்த நடிகர் எப்போதுமே கமல்ஹாசன்தான் என்று கூறியுள்ளார் திரிஷா.

    இதுவரை தனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் கூறியதில்லை திரிஷா. குறிப்பாக இளம் நடிகர்களில் உங்களை யார் அதிகம் கவர்ந்தது என்ற கேள்விக்கே பதிலே கொடுக்க மாட்டார். எதற்கு வம்பு என்று.

    இந்த நிலையில் தனக்குப் பிடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே என்று கூறியுள்ளார் திரிஷா. இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது...

    உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது வரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியை தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

    எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்கு பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை.

    பிடித்த நடிகையாக முன்பு சிம்ரன் இருந்தார். இப்போது தமன்னாவையும், சமந்தாவையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் திரிஷா.

    ஒருவேளை ரஜினி படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் ரஜினியைப் பிடிக்கும் என்று கூறியிருப்பாரோ திரிஷா...?

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more