'நம்புங்க, உங்களுக்கு வயசாயிடுச்சு...' கண்ணடித்து வீடியோ வெளியிட்ட ஹீரோயினுக்கு கண்டபடி கலாய்

By

Recommended Video

கண்ணடித்து வீடியோ வெளியிட்ட கிரண்.. Cute வீடியோ

சென்னை: கண்ணடித்து வீடியோ வெளியிட்ட நடிகையை, ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரசாந்தின் வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கிரண்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டனின் உறவினர்.

கேரக்டர் ரோலில்

கேரக்டர் ரோலில்

தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வராததால் கேரக்டர் ரோலில் நடித்துவந்தார். கார்த்தியின் சகுனி, விஷாலின் ஆம்பள படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த கிரண், அடுத்து சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கிளாமர் போட்டோ

இந்நிலையில், இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டு ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வாவ் சொல்ல வைத்தன. அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் கடுமையாகக் கலாய்த்தனர்

நிஜமாகவே வயசாயிடுச்சு

சில ரசிகர்கள் வரவேற்றிருந்தாலும், ஒருவர், 'மேடம்... தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு நிஜமாகவே வயசாயிடுச்சு. உண்மையை ஏத்துக்குங்க' என்று அட்வைஸ் செய்திருந்தார். இன்னொருவர், நான் சின்னபையனா இருந்தப்ப உங்களை பிடிக்கும் என்று கிண்டல் அடித்துள்ளார். இன்னும் சிலர் அந்த ஹாட் புகைப்படத்தி ஆபாசமாக விமர்சித்து உள்ளனர்.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

அதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ அது. அந்த வீடியோவையும் பலர் லைக் செய்திருந்தனர். சிலர் கடுமையாக கலாய்த்திருந்தனர். இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா? என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். என்னிதயம் துடிப்பை நிறுத்திவிட்டது என்கிற ரேஞ்சுக்கு சிலர் கவிதையாக வர்ணித்திருந்தனர்.

கண்ணடிக்கும் வீடியோ

கண்ணடிக்கும் வீடியோ

இதற்கிடையே புதிய வீடியோ ஒன்றை நடிகை கரண் நேற்று வெளியிட்டுள்ளார். அதில், கிளாமர் உடையில் இருக்கும் அவர், ஏகப்பட்ட மேக்கப்புடன் கண்ணடித்தபடியும் பிளையிங் கிஸ் கொடுத்தபடியும் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் லைக் செய்துள்ள அந்த வீடியோவையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X