'நேற்று பிறந்தது போல் இருக்கிறது..' தன் குழந்தையின் போட்டோவை வெளியிட்டு வாழ்த்திய பிரபல ஹீரோயின்!

By

சென்னை: தனது குழந்தையின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அதன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணா இயக்கிய 'நெடுஞ்சாலை' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவதா. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் தொடர்ந்து அதே கண்கள் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அதிரடியாக மிரட்டினார். இதில் அவர் கேரக்டர் பாராட்டப்பட்டது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

அடுத்து மாறா, இரவாகாலம் படங்களில் நடித்து வரும் ஷிவதா, தனது நீண்ட நாள் நண்பர் முரளி கிருஷ்ணனை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழிலும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் ஷிவதாவுக்கு கடந்த வருடம் பெண் குழந்தைப் பிறந்தது.

வீடியோ ஆல்பம்

வீடியோ ஆல்பம்

லாக்டவுன் காரணமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவதா, இப்போது தனது குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அதன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுடுள்ள அதில் ஷிவதாவின் கணவர் முரளி கிருஷ்ணனும் இருக்கிறார். அதில் ஷிவதா கூறியிருப்பதாவது: நீ நேற்று பிறந்தது போல்தான் உணர்கிறேன். ஆனால், பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

இப்போதும் உணர்கிறேன்

இப்போதும் உணர்கிறேன்

முதன் முறையாக, உன்னைக் கையில் தூக்கியபோது இருந்த அரவணைப்பை, பூரித்த உணர்வை இப்போதும் உணர முடிகிறது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நீ என் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறாய். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், அருந்ததி. வாழ்நாள் முழுவதும் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என் குட்டி இளவரசியே நீ எப்போதும் சிரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

குட்டித் தேவதை

குட்டித் தேவதை

இதையடுத்து, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, என்னது அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்துள்ளார். மேலும் சில திரை பிரபலங்ளும் அருந்ததிக்கு வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர். ரசிகர்களும் அந்த குட்டித் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X