ஹீரோக்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைப்பதால் பாதிக்கப்படும் தமிழ் ஹீரோயின்கள்!!

தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைவது, பைரஸி, திருட்டு டிவிடி போன்ற பிரச்னைகளால் தமிழ் சினிமா தள்ளாடுகிறது. அதிலும் பெரிய படங்கள் நிலை ரொம்ப மோசம். சமீபத்தில் வந்த படங்களில் மாநகரம், துருவங்கள் பதினாறு போல சின்ன பட்ஜெட் படங்கள்தான் லபாம் பார்த்துள்ளன.

பெரிய பில்டப்புகள் தரப்பட்ட சிங்கம் 3 க்கே தமிழில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று அந்தப் படத் தயாரிப்பாளரே ஒப்புக்கொண்டுள்ளார்.

Tamil Heroines also targets Telugu market

பெரிய ஹீரோக்கள் இது இல்லைனா இன்னொண்ணு என்ற ஃபார்முலாவில் தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் ஹீரோயின்கள்தான். தெலுங்கில் மார்க்கெட் இருக்கும் நடிகைகளான ரகுல்ப்ரீத் சிங், ரெஜினா போன்றோரை ஜோடியாக்க ஆசைப்படுகிறார்கள். ரகுலும் ரெஜினாவும் இங்கிருந்து போனவர்கள்தான். அனுஷ்காவுக்கும் இதே போல மவுசு உள்ளது. தமன்னா, காஜல் அகர்வால் போன்ற இரு மொழிகளுக்கும் தெரிந்த ஹீரோயின்கள் பிஸியாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.

இதனால் இப்போது ஹீரோயின்களும் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட நழுவ விட்டுவிட்டு தெலுங்கில் தனக்கு மார்க்கெட் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

தமிழில் மட்டுமே கவனம் செலுத்தும், தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த நடிகைகளை பெரிய ஹீரோக்கள் சீண்டுவதே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X