அழகின் கலைநயம்.. ராஜா ரவி வர்மா ஓவியங்களாக மாறிய தமிழ் ஹீரோயின்கள்.. என்ன விஷயம் தெரியுமா?
Recommended Video
சென்னை: சுகாசினி மணிரத்னத்தின் நாம் அறக்கட்டளை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ராஜா ரவி வர்மா ஓவியங்கள் கான்செப்டில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
நடிகைகள் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நதியா, சமந்தா, ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த போட்டோஷூட்டிற்காக போஸ் கொடுத்துள்ளனர்.
அச்சு அசல் ரவி வர்மா வரைந்த ஓவியங்கள் போல நடிகைகள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
பழக்கூடையுடன் குஷ்பு
லிமிடட் எடிதன் கேலண்டருக்காக ராஜா ரவி வர்மா ஓவியத்தில் பழக்கூடையுடன் நிற்கும் பெண் ஓவியம் போல நடிகை குஷ்பு மாறியுள்ளார். பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட் ராம் மற்றும் ஆர்ட் டைரக்டர் கலை தேவா இணைந்து ஹீரோயின்களை அழகான ஓவியங்களாக மாற்றி உள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன்
மாடத்தில் கை வைத்திருக்கும் பெண் ஓவியம் போல நடிகை ரம்யா கிருஷ்ணன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, இவ்வளவு அழகாக இருந்தால், நமக்குள் இருக்கும் நட்பு ரத்தாகி விடும் என கிண்டலாக பதிவிட்டு ரம்யா கிருஷ்ணனின் அழகின் மேல் பொறாமை கொண்டுள்ளார்.
கையில் கனியுடன்
ஜானு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகை சமந்தா கையில் எழுமிச்சை கனியுடன் ராஜா ரவி வர்மன் ஓவியம் போல போஸ் கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமந்தா ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. சமந்தா ஜானுவாக நடித்துள்ள ஜானு திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாகிறது.
ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசனும் இந்த கேலண்டர் ஷூட்டுக்காக போஸ் கொடுத்துள்ளார். நீல நிற புடவையில் ஒரு அழகிய போஸும், பிங்க் நிற புடவையில் ஒரு அழகிய போஸும் நடிகை ஸ்ருதி ஹாசன் கொடுத்து அசத்தியுள்ளார். அண்மையில் வெளியான ராயல்ஸ் கேலண்டர் போட்டோஷூட்டுக்கும் ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் பூச்செண்டு ஒன்றை வைத்துக் கொண்டு பழங்காலத்து பெண் போன்ற உடை மற்றும் கொண்டை போட்டு உடல் நிறைய நகை போட்டு கொடுத்துள்ள போஸும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. வெங்கட்ராமின் புகைப்படத் திறமையை இந்த புகைப் படங்கள் பறை சாற்றுகின்றன.

தலையில் கை வைத்தபடி
எவர்க்ரீன் பியூட்டியான நடிகை நதியாவும் இந்த லிமிடட் எடிஷன் கேலண்டர் போட்டோஷூட்டுக்கு அழகாக போஸ் கொடுத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைன், நகைகள், மேக்கப் என அனைத்தும் ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தை டிஜிட்டல் வடிவில் பறைசாற்றுகின்றன. மேலும், சில நடிகைகளும் இந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டு அழகான ஓவியங்களாக மாறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications