கவர்ச்சி காட்டாத டாப் ஹீரோயின்கள்.. கதை தான் ஹீரோ.. எந்தெந்த படங்கள் தெரியுமா!

சென்னை: தமிழ் சினிமாவில் மாடர்ன் உடையில் வந்து கலக்கியிருந்தாலும் துளி அளவும் கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் வெற்றி கொடி நாட்டியுள்ள நடிகைகள் ஏராளம். அதில், 80களில் அறிமுகமான நடிகைகள் சிலர் இன்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை ரசிக்க வைத்து வருகின்றனர். அவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுகுறித்த தொகுப்பை இதில் காணலாம்.

ரேவதி: கேரளாவை பூர்விமாக கொண்ட ரேவதி மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கவர்ச்சி காட்டாத நடிகை என்றதும் நம் நினைவுக்கு வருவது ரேவதி தான். கமல், ரஜினி, சத்யராஜ், மோகன் என பல டாப் ஹீரோக்களுடன் ஏகப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். பெண் கதாப்பாத்திரங்களுக்கு என்று தனி மதிப்பை கொடுத்தவர் ரேவதி. மறுபடியும், புதுமைப்பெண் போன்ற படங்களை கொண்டாடும் ரசிகர்களும் இருக்கின்றனர். மெளனராகம் ரேவதியை எளிதில் மறக்க முடியுமா. சுட்டு எரிக்கும் பார்வை, அமைதிக்கு பின்னால் காதலின் வலி என ஏற்க முடியாத திருமண வாழ்வில் ஒரு பெண்ணின் போராட்டத்தை கண் முன்னே நிறுத்தியிருப்பார். இதுவரை இவர் முகம் சுழிக்கும் வகையில் உடைகளை கூட அணியாத நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

Unattractive actresses top heroines list kollywood

சுவலட்சுமி: சுட்டு போட்டாலும் தமிழ் வராது, பெங்காலி மொழி பேசும் பெண் என்றாலும் பார்க்க தமிழ் பெண் போலவே அழகாக இருப்பார் சுவலட்சுமி. அஜித் நடித்த ஆசை படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தன. அதன் பிறகு லவ் டுடே, கோகுலத்தில் சீதை, காத்திருந்த காதல், தினந்தோறும், இனியவளே, பொன்மணம் என குடும்பக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த சுவலட்சுமி வெளிநாட்டு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

நதியா: 80களின் குயின் என்றே நதியாவை கூறலாம். பூவே பூச்சுட வா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ரஜினி, பிரபு, சத்யராஜ், மோகன் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தாலும், கதைக்கான ஹீரோயினாகவே வலம் வந்தார். கவர்ச்சியே காட்டாமல் நடித்து வந்துள்ளார். சினிமாத்துறையில் இருந்து விலகியிருந்த இவர், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. மீண்டும் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

Unattractive actresses top heroines list kollywood

பார்வதி: பூ படத்தில் அறிமுகமான பார்வதி, தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் நிறைவான கதாப்பாத்திரங்களின் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பூ பார்வதியை மறந்து போன ரசிகர்களுக்கு மரியான் படத்தில் பனிமலராக வந்து உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருப்பார் பார்வதி. பார்வதி கவர்ச்சி குறித்து விளக்கமும் அளித்துள்ளார். மரியான் படத்தில் பனிமலரின் காதலும், ஏக்கமும் தான் கவர்ச்சி. ஆடையில் இல்லைங்க கவர்ச்சி, பனிமலர் மரியானுக்காக செய்கின்ற ஒவ்வொன்றும் கிளாமர் தான் நெத்தியடி பதில் தந்திருப்பார்.

சாய் பல்லவி: பிரேமம் படத்தின் மூலம் டீச்சராக வந்து திரை ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அவரது நடிப்பை பார்த்து திரையுலக ரசிகர்கள் வியந்து ரசித்து பாராட்டினர். அழகை பற்றி யாராவது கேள்வி கேட்டால் மேக்கப் இல்லாமலும் இயற்கையாக இருப்பதே அழகுதான். இதில், கவர்ச்சி என்பது முகத்தில் அழகாக தெரிகிறது. இதைவிட கவர்ச்சி தேவையா என பதில் அளித்தார். தமிழ் ரசிகர்களின் மனதில் ரவுடி பேபியாக மட்டும் இல்லைங்க இந்து ரெபேக்காகவும் வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X