விஜய்க்கு வாக்களித்தேன்.. சிம்ப்பாளிக்காக சொன்ன திரிஷா.. இது தெரிஞ்சதுதானே.. சும்மா தெறிக்குது

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. 84.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலி வாக்கு விழுக்காடு அதிகரித்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. இவ்வளவு விழுக்காடு வாக்குகள் விழுந்ததற்கு விஜய்யின் அரசியல் வருகைதான் காரணம் என்று அவரது ரசிகர்கள் வழக்கம்போல் கூற தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் நேற்று வாக்களித்த நடிகை திரிஷா தான் விஜய்க்குதான் வாக்களித்தேன் என்பதை சிம்பாளிக்காக சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எல்லோருமே ரொம்ப எதிர்பார்த்தார்கள். எப்போதும் திமுக, அதிமுக என இருமுனை போட்டி நிலவும். இந்த முறையோ திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி நிலவியது. தவெகவும், நாம் தமிழரும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கின. விஜய் இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதையும் பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவை அனைத்துக்கும் மே நான்காதம் தேதி பதில் கிடைத்துவிடும்.

Tamil Nadu Election 2026 84 69 Turnout Trisha Krishnan s Viral Post Sparks Vijay Support Buzz
Photo Credit:

மக்கள் செம உற்சாகம்: இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள், கட்சி தலைவர்களைவிடவும் மக்கள் அதீத உற்சாகமாக இருந்ததை காண முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் சிதறியிருப்பவர்கள் வாக்களிப்பதற்காக ஆயிர கணக்கில் பணம் செலவு செய்து சொந்த ஊருக்கு சென்றார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் எல்லாம் போதிய பேருந்து வசதி இல்லாமல் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்து; கூட்டத்தில் நின்றுகொண்டு சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தார்கள். இப்படி அவர்களுக்கு வந்த அதீத ஆர்வத்தின் காரணமாக இந்த முறை 84.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

பிரபலங்கள் வாக்கு: திரைத்துறை பிரபலங்களும் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்தினார்கள். ரஜினி, அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, திரிஷா என பலர் தத்தமது வாக்கு சாவடிகளில் வாக்குகளை செலுத்தினார்கள். தங்கள் துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்யை அவர்கள் ஆதரித்தார்களா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது. மாற்றம் எதுவும் தேவையில்லை என அஜித் சொன்னதாக நேற்று காலையிலேயே ஒரு போலியான செய்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த திரிஷா: வாக்களிக்க எத்தனை பிரபலங்கள் வந்திருந்தாலும் திரிஷாவின் வருகை மீடியா மற்றும் மக்களின் அதீத கவனத்தை ஈர்த்தது. விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விஜய்யும், திரிஷாவும் திருமணத்துக்கு ஒன்றாக வந்தார்கள். மேலும் விஜய் - சங்கீதா பிரிந்ததற்கு திரிஷாதான் காரணம் எனவும் அவரது பெயர் இதில் அடிபடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் வாக்களிக்க வந்திருந்தார்; தான் விஜய்க்குதான் வாக்களித்தேன் என்பதையும் சிம்பாளிக்காக சொல்லியிருக்கிறார்.

கில்லி பாடல்: அதாவது வாக்களிக்க தான் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தன் இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதன் பின்னணியில் கில்லியில் இடம்பெற்றிருக்கும், 'அர்ஜுனரு வில்லு', 'ஷைலலா' பாடல்களை எடிட் செய்துவைத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வாக்களித்துவிட்டு அமைதியாக செல்ல வேண்டியதுதானே; எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் ரிசல்ட் வரைக்கும் அமைதியாக இருங்கள் மேடம் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X