ஜோதிகாவின் கோபம் நியாயமானது.. அவரால் பற்றிக்கொண்டது.. ஓபனாக பேசிய பிரபலம்
சென்னை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தற்போது பிஸியாக படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். அது சுமாரான வரவேற்பையே பெற்றது. தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்திவரும் ஜோதிகா சமீபத்தில் தனது கண்வர் சூர்யாவுடன் வெளிநாட்டுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
வாலி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னுடைய கரியரை தொடங்கியவர் ஜோதிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். 2000த்தின் ஆரம்பத்தில் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் அவர். இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த சூர்யாவை காதலித்தார். முதலில் அந்தக் காதலுக்கு சிவகுமார் சம்மதம் கொடுக்கவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ஓகே சொன்னார்.
சூப்பர் திருமணம்: சிவகுமாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து 2006ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்ததன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய ஜோ; சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். இந்த முறை அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். அது பலரிடம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

ஹிந்தியில் கவனம்: திடீரென அவருக்கு ஹிந்தியின் பக்கம் கவனம் சென்றது. அதனையடுத்து சூர்யா மற்றும் தனது குழந்தைகளுடன் மும்பை சென்று செட்டில் ஆகியிருக்கும் அவர்; பாலிவுட்டில் வெப் சீரிஸ்கள், படங்கள் என பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் வெப் தொடரில் நடித்திருந்தார். மேலும் சில ப்ராஜெக்ட்களிலும் கமிட்டாகியிருக்கிறார். ஹிந்தியிலேயே முழு கவனம் இருப்பதால் தென்னிந்திய சினிமாக்களில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது.
சூழ்ந்த சர்ச்சைகள்: இதற்கிடையே உடன்பிறப்பே படத்தில் நடித்தபோது ராஜ ராஜ சோழனின் பெருமையைவிடவும் அரசு மருத்துவமனை ஒழுங்காக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஜோதிகாவுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார்கள். அந்த விவகாரத்தில் சூர்யாவும் காட்டமாகவும், ஆழமாகவும் ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார்.
அது மட்டுமில்லை: அந்த சர்ச்சையோடு மட்டுமின்றி சூர்யாவுக்கும் சிவகுமாருக்கும் மன வருத்தம். அதற்கு காரணமே ஜோதிகாதான் என்றும் ஒரு பேச்சு எழுந்தது. மேலும் மும்பையில் சூர்யா செட்டில் ஆவதற்கு காரணமே ஜோதிகாதான் என்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் அதனை திட்டவட்டமாக சூர்யா மறுத்தார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் பகிர்ந்திருந்த புகைப்படங்களை வைத்தும் ஒருசிலர் கீழ்த்தரமாக பேசினார்கள்.
தமிழா தமிழா பாண்டியன் பேட்டி: இந்நிலையில் ஜோதிகா குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "சிவகுமாரின் குடும்பம் மீது திரைத்துறையில் பலருக்கும் பெரிய மரியாதை இருக்கிறது. மருத்துவமனையையும், தஞ்சை பெரிய கோயிலையும் பற்றி ஜோதிகா பேசியபோது பற்றிக்கொண்டது. அவரது கோபம் நியாயமானதுதான். ஜோதிகா அடிப்படையில் மும்பையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் இங்கு செட்டில் ஆன பிறகும் மேட்டுக்குடி மனப்பான்மை இல்லாமல் பேசியது பாராட்டுக்குரியது" என்றார்.


Click it and Unblock the Notifications











